கார்த்திக் சுப்புராஜின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா? அழகான ஜோடி என வர்ணிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தற்போது கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகுதான் இவருக்கு மற்ற நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார். அதுவும் ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய பேட்ட திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இணைந்தார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை. அதனால் தற்போது கார்த்தி சுப்புராஜ் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் வைத்து மகான் என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் பல பட விழாக்கள் மற்றும் விருது விழாக்களில் கலந்து கொண்டுள்ளார் ஆனால் இதுவரைக்கும் இவரது மனைவி பெரிதாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளவில்லை தற்போது ஏதோ ஒரு விழாவிற்கு சென்று உள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

அதில் கார்த்திக் சுப்புராஜ் அவரது மனைவியுடனும் பாபி சிம்ஹா அவரது மனைவியுடனும் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அழகான ஜோடி என்று ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.