காரில் அமர்ந்து அஜித் மகன் ஆத்விக் கொடுத்த முத்தம்.. அவர் மாமா வெளியிட்ட வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கக் கூடிய செய்தி என்றால் அது தல, தளபதி பற்றிய செய்திதான். இவர்களின் படங்கள் வெளிவந்தாலும் இவர்களின் குடும்ப புகைப்படங்கள் வெளிவந்தாலும் சமூக வலைதளங்களில் அன்று அதுதான் முதலிடத்தை பிடிக்கும்.

தல அஜித் சில வருடங்களாக எந்த ஒரு படத்தின் புரோமோஷன் மற்றும் எந்த ஒரு பட விழாவிற்கும் கலந்து கொள்வதில்லை. அதனால் ஏக்கம் அடைந்த இவரது ரசிகர்கள் இவரை எப்படி பார்ப்பது என துடிதுடித்து வருகின்றனர்.

ஆனால் அஜித் படத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளை தவிர மற்ற எல்லா செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட வேரியோ ஹெலிகாப்டரின் எம்.டி., கிர்ஸ்டன் சோட்னருடன் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் அதை கொண்டாட தொடங்கினர். மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அஜித்தின் இரண்டாவது மகனான ஆத்விக் சிறுவயது புகைப்படங்கள் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது மளமளவென வளர்ந்து விட்டார்.

மேலும் ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் அஜித் மகனுடன் முத்தம் கொடுக்கும் செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் இப்புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்புகைப்படம் அனைத்து ரசிகர்களாலும் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நம்பிக்கை துரோகம் செய்த விகே ராமசாமி.. சாகும் வரை குற்ற உணர்ச்சியிலிருந்து சம்பவம்!

மேடை நாடகங்களின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்து பல சாதனைகளை படைத்தவர் நடிகர் வி கே ராமசாமி. இவர் இளம் வயதிலேயே வயதான பல கேரக்டர்களில் நடித்த ஒரே நடிகர். மேலும் இவர் நடிகர் ...