காத்துவாக்குல 2 காதல் படத்தின் முதல் நாள் வசூல்.. விமர்சனத்தை பார்த்தா இது நம்புற மாதிரி இல்லையே

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என திரைத்துறையில் தற்போது பிஸியாக இருக்கும் பிரபலங்கள் இணைந்து நடித்த படம் காத்துவாக்குல 2 காதல். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் குடும்பத்துடன் இப்படத்தைப் பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இப்படம் ரொமான்டிக் காமெடிப் படமாக எடுக்கப்பட்டு இருந்தது. அதாவது கண்மணி மற்றும் கதீஜா இருவருக்கும் ராம்போ கிடைத்தாரா என்பதே இப்படத்தின் மையக்கதை.

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதல்நாள் அதிகாலை காட்சிகளில் டிக்கெட்டுகள் எல்லாம் விதிக்கப்பட்டிருந்தது. தென்னிந்திய நடிகைகளில் முன்னணி இரண்டு நடிகைகளும் இப்படத்தில் நடித்திருந்ததால் காத்துவாக்குல 2 காதல் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது.

இதனால் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல்லாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் வெளியாகி முதல் நாள் 7 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் இப்படம் 13 கோடிகள் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் காத்துவாக்குல 2 காதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஏனென்றால் அங்கு சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுவும் சமந்தா பிறந்த நாள் அன்று இப்படம் ரிலீசானது. மேலும் இப்படத்தில் சமந்தாவின் கதீஜா பேகம் கதாபாத்திரம் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தால் தெலுங்கு திரை உலகில் நல்ல வசூலை ஈட்டியது.

ஆனால் படத்தின் விமர்சனங்களால் காற்றுவாக்கில் ரெண்டு காதல் படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் படத்தை இயக்குவார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.