காதில் பூ வைத்திருக்கும் ரம்யா நம்பீசன்.. இணையத்தில் வெளியான அழகான புகைப்படம்

தமிழில் குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, டமால் டுமீல் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா நம்பீசன். இவர் நடிப்பு மட்டுமல்லாமல், ஒரு சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது தொகுப்பாளராக இருந்து ஹீரோவாக அறிமுகமான ரியோ ராஜுக்கு ஜோடியாக பிளான் பண்ணி பண்ணனும் எனும் படத்தில் ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிச் சென்றுள்ளது.

பொதுவாக நடிகைகள் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகை ரம்யா நம்பீசனும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

இன்ஸ்டாகிராமில் பதிவிடும் இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது சிம்பிளாக புடவை அணிந்து க்யூட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.