காதலை வெளிப்படையாக சொன்ன வாரிசு நடிகர்.. முற்றுப்புள்ளி வைத்த மஞ்சிமா மோகன்

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இதற்கு முன்னதாக மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் இருவரும் இணைந்து எஃப் ஐ ஆர் படத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் என்ற படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். இதன்மூலம் இவர்கள் காதலித்து வருவதாகவும் அதற்கு அவர்களது குடும்பமும் சம்மதித்து விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

சமீபத்தில் மஞ்சுமா மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக் உன்னைப் போன்ற ஒரு பெண் தன் வாழ்க்கையில் இருப்பது அற்புதமான விஷயமாக நினைக்கிறேன் என பதிவிட்டிருந்தார். அதுக்கு “தேங்க்யூ ஜிகே” என மஞ்சிமா மோகன் ரிப்ளை கொடுத்திருந்தார்.

இவ்வாறு கௌதம் கார்த்திக் பதிவிட்டு இருந்தது அவர் காதலை வெளிப்படையாக சொன்னது போல் இருந்தது. இதனை வைத்து ரசிகர்கள் மஞ்சிமா மோகன் கௌதம் கார்த்திக் காதலிப்பதாக சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

ஆனால் சமீபத்திய ஊடகம் ஒன்றுக்கு மஞ்சிமா மோகன் பேட்டி கொடுத்துள்ளார். அதில் என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான சம்பவங்களை யாரிடத்திலும் நான் மறைத்ததில்லை. அது ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அதை நான் வெளிப்படையாக கூறி வருகிறேன் என பேட்டி அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் திருமணம் என்பது ஒரு பெரிய நிகழ்வு, அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஊடகங்களில் வந்த செய்தியை பார்த்து வேதனை அடைந்தேன். எனது பெற்றோர்கள் என்ன ரியாக்ஷன் கொடுப்பார்கள் என அதிர்ச்சியுடன் இருந்தேன். ஆனால் இதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் இந்த தகவலை பதிவிட்டவர் என்னிடம் இதைப்பற்றி கேட்டிருந்தார். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என அவரிடமே நான் மறுத்து கூறினேன். ஆனாலும் இந்த பொய்யான தகவலை தொடர்ந்து அவர் பரப்பி வருவதாக மஞ்சிமா மோகன் கூறியுள்ளார். இதனால் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலிப்பது வதந்தியே என்பது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.