தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நண்பனாகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமடைந்த நடிகர், தற்போது தனது காதலியுடன் ரகசியமாக சென்ற சுற்றுலா பயணத்தின் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் ரகசிய புகைப்படங்கள் ரசிகர்களால் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கதாகும்.

அஞ்சான் திரைப்படத்தில், நடிகர் சூர்யாவிற்கு நண்பனாக நடித்த வித்யூத் ஜாம்வால் தனது காதலியுடன் தாஜ்மஹாலுக்கு ரகசியமாக சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இருவரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. இவர் ஊசரவெல்லி, சக்தி போன்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர்.

தமிழ்த் திரைப்படத்தில் பில்லா2 வில்லனாக  நடித்தார். அதன்பின், துப்பாக்கி படத்திலும் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லனாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் வித்யூத், நடிகை நேஹா துபியா உடன் இணைந்து ‘சனக்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

அதனைத் தொடர்ந்து, விரைவில் வரவிருக்கும் விஜய் 65 ‘பீஸ்ட்’ படத்திலும் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வித்யூத் ஜாம்வாலிடம் இணையத்தில் கசிந்த ரகசிய புகைப்படத்தை பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது, ‘நானும் காத்திருக்கிறேன். ஆனால், அந்த தகவல் உண்மை இல்லை’ என்று தெரிவித்துள்ளார். நடிகை மோனா சிங்குடன் நடிகர் வித்யுத் ஜாம்வாலும் டேட்டிங் செய்துக்  கொண்டிருந்தனர். இரண்டு ஆண்டுகள் கழித்து, சில கருத்து வேறுபாடு காரணத்திற்காக நடிகர் வித்யுத் ஜாம்வாலும் நடிகை மோனா  சிங்கும் பிரிந்தனர்.

தற்போது, ஆடை வடிவமைப்பாளர் (பேஷன் டிசைனர்) நந்திதா உடன் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல்கள் பல வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அவரே தனது நிச்சயதார்த்தம் நந்திதா உடன் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேபோல், நடிகர் வித்யூத்தும், நந்திதாவும் தாஜ்மஹாலுக்கு சென்று வந்த புகைப்படங்களை நந்திதா தனது இன்ஸ்டா ஐடியில் வெளியிட்டிருந்தார். பிறகு, சிலமணி நேரத்தில் அவரே அதை நீக்கி விட்டார். ஆனால்,  ரசிகர்கள் அதனை பகிர்ந்துள்ளனர். அது மிகவும் வைரலாகி வருகின்றது. தற்போது, அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.