காதலித்து திருமணம் செய்து கொண்ட 5 பிரபல ஜோடிகள்.. ரசிகையாக வந்து தளபதியை தூக்கிய சங்கீதா

இன்றைய தலைமுறைகளுக்கு மிகவும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ள சில காதல் ஜோடிகள் மட்டுமே இன்று தமிழ் சினிமாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அவர்கள் காதலை பற்றி தெரிந்து கொள்வோம்.

அஜித்-ஷாலினி: இவர்கள் இன்றளவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்படும் சிறந்த காதல் ஜோடிகளாக சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காதல் இவர்கள் நடித்த படத்திலிருந்து தான் ஆரம்பமானது. அமர்க்களம் படத்தில் ஷாலினி அஜித்துடன் முதலாவது ஜோடி சேர்ந்த படம். இப்படத்தில் நடிக்கும் பொழுது எந்த எண்ணமும் இல்லாமல் நடித்தவர்கள் படமும் முடியும் தருவாயில் அஜித் அவர்கள் முதன் முதலில் காதல் வெளிப்படுத்தியுள்ளார். அழகாக இயக்குனர் சரணிடம் இந்த படத்தை வேகமாக முடியுங்கள் இல்லை என்றால் ஷாலினியை நான் காதலித்து விடுவேன் என்று பயமாக இருக்கிறது என்று ஷாலினி வைத்துக்கொண்டே கூறியுள்ளார். இன்றளவும் மிக சிறந்த ஜோடிகளாக எடுத்துக்காட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

விஜய்-சங்கீதா: இந்த காதல் ஜோடி படங்கள் இணைய வில்லை என்றாலும் விஜய்யின் படத்தை பார்த்து இணைந்த ஜோடி. விஜய் நடித்த பூவே உனக்காக என்ற படத்தை பார்த்து விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் லண்டனில் வளர்ந்த சங்கீதா அவர்கள் விஜய் ரசிகராக வந்து விஜய்யை சந்தித்தார். அவர்களது முதல் சந்திப்பு நட்பாக மாறி பல சந்திப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற படத்தில் நடித்த விஜய் அந்த சமயத்தில் சங்கீதாவை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன் மூலம் விஜயின் பெற்றோர்களுக்கு சங்கீத அறிமுகம் கிடைத்து சங்கீதாவை பிடித்து மருமகளாக ஏற்றுக் கொண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இன்றளவும் இவர்கள் அழகான காதல் ஜோடிகளாக  வாழ்ந்து வருகிறார்கள்.

பிரசன்னா-சினேகா: இந்த காதல் ஜோடி எதார்த்தமான ஒரு படத்தில் அதாவது அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தார்கள். இந்த படம் அமெரிக்காவில் முழுவதும் படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் இவர்கள் எதார்த்தமாக பழகி நல்ல நட்பை வளர்த்துள்ளனர். பின்பு சென்னை வந்த பிறகு இந்த நட்பு தொடர்ந்துள்ளது. சினேகா குடும்பத்தில் மாப்பிள்ளை பார்க்கும் சமயத்தில் சினேகாவிடம் அவர்களது பெற்றோர் பிரசன்னாவை திருமணம் செய்து கொள் நல்ல பயனாக தெரிகிறான் என்று சொல்லியுள்ளார்கள். அதற்கு ஏதும் பதில் சொல்லாமல் இவருக்கு அழைப்பு விடுத்து எதார்த்தமாக நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்க வியப்பில் பிரசன்னா சரி என்று சொல்ல இவர்களுக்கு அழகாக திருமணம் நடந்து முடிந்தது.

சூர்யா-ஜோதிகா: இவர்கள் காதல் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். ஜோதிகா அவர்கள் அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர் எளிமையாக பேசக்கூடியவர் இது சூர்யாவிற்கு பிடித்துப் போனது. அதேபோல் சூர்யாவின் அடக்கமான பேச்சு கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர் சூர்யா இதனை விரும்பி பழகி உள்ளார் ஜோதிகா.

நாளடைவில் இருவரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த நேரத்தில் காக்க காக்க என்ற திரைப்படத்தில் சூர்யாவிற்கு சிபாரிசு செய்து நடிக்க செய்துள்ளார் ஜோதிகா. இந்த படத்தில் இவர்கள் நடித்த விதம் அனைத்து காதல் ஜோடிகளுக்கு பிடித்த படமாக அமைந்தது.  இந்த திரைப்படத்தின் மூலம் இவர் காதல் பரிமாறப்பட்டது. சிறு பிரச்சனைகள் இருந்தாலும் குடும்பத்தின் ஆதரவு கிடைத்து திருமணம் செய்துகொண்டு. காதல் என்றால் சூர்யா ஜோதிகா என்று பல இளைஞர்கள் போற்றும் வகையில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆர்யா-சாயிஷா: தமிழ் சினிமாவில் பிளேபாய் ஆக அறியப்பட்டவர் ஆர்யா. இவர் வாழ்க்கை நிறைய பெண்கள் வந்து இருக்கிறார்கள் அனைவரும் காதலித்தவர் இவர் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் பல நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட கடைசிவரை திருமணம் செய்யாமல் ஜாலியாக இருந்து கொண்டிருந்தார்.

இந்தப் பிள்ளைக்கு எப்போது திருமணம் என்று தமிழக ரசிகர்களால் கேட்கப்பட்டு உரையாடல்கள் நடந்தது. ஆனால் ஆர்யா சாயிஷா கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தனர். இத்திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இவர்கள் காதல் கச்சிதமாக பொருந்தி இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் உடனே நடைபெற்றது. பிளேபாய் ஆர்யா இப்பொழுது மிக பொறுப்புடன் தனது திருமண வாழ்க்கையை அழகாக காதல் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இது அனைவராலும் பாராட்டப்பட்டு ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.