காதலா? மோதலா? நயன்தாராவுடன் மோதும் ஜெய்.. சத்தம் இல்லாமல் வெளிவந்த ரிலீஸ் தேதி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் ஹீரோவாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஜெய், அதுல்யா நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித் துணிக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய் நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக எண்ணித் துணிக என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க சாம் கிருஷ்ணா படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை எஸ் கே வெற்றிச்செல்வன் என்பவர் இயக்க சாம் சுரேஷ் என்பவர் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீதரன் மரியதாஸ் தன்னுடைய Krikes சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நெகடிவ் ரைட்ஸ் அதாவது மொத்த உரிமையையும் இவர்தான் கைப்பற்றியுள்ளார். தற்போது இந்த படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதே தினத்தில்தான் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாகிறது. இதனால் ஜெயிக்கப்போவது காதலா? மோதலா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.