காடர்களுக்கு கிடைத்த காட்டு விருந்து.. சர்வைவரில் ஷாப்பிங் செய்துவரும் போட்டியாளர்கள்!

ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு ரியாலிட்டி ஷோவான சர்வைவர் சற்று விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. சென்ற எபிசோடில் காடர்கள் அணிக்கு விருந்து கிடைத்தது, அத்துடன் ஷாப்பிங் செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். காட்டுக்குள்ளே காடர்கள் அணிக்கு சாம்பார் சாதம், லெமன் சாதம், ஜூஸ், பிஸ்கட், வாழைப்பழம், கமலா ஆரஞ்சு, பிரியாணி, சாண்ட்விச், ஸ்டப்டு புரோட்டா என பலவகை டிஸ்ஷஸ் உடன் கூடிய அசத்தலான விருந்து கிடைக்கப்பெற்றது. அனைவரும் விருந்தினை உண்டு மகிழ்ந்தனர்.

காட்டுக்குள்ளே அமைக்கப்பட்டிருந்த விருந்து வழக்கம் போல் பாத்திரங்களைக் கொண்டு அமைக்கப்படாமல், வித்தியாசமாக மூங்கிலால் செய்யப்பட்ட கூடைகளிலும், தட்டுகளிலும், அழகழகாக வண்ணப் பூக்களை தூவி, பார்ப்பதற்கே அற்புதமாக அமைக்கப்பட்டிருந்தது. காடர்கள் அதையும் விக்ரம் மற்றும் உமாபதி ராமையா இருவரும் உண்ணுவதற்கு இலையை எடுத்து வர சென்றனர்.

அப்போது வேடர்கள் அணியிலிருந்து வந்த மற்றொரு போட்டியாளர் உணவு உண்ண தொடங்கி விட்டார். அவர் பசி அவருக்கு தானே தெரியும். ஆனால், காடர்கள் அணியை சேர்ந்த மீதி இருந்த இரண்டு பெண் போட்டியாளர்களும், இலை எடுத்து வரச் சென்ற தனது சக போட்டியாளர்களுக்காக காத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து காடர்கள் அணி தங்களது கையில் வைத்திருந்த 55 காசுகளைக் கொடுத்து காபி பவுடர், சர்க்கரை, சோப் போன்ற பொருட்களை வாங்கி சென்றனர். இதில் சோப்பு-10 மற்றும் காபி பவுடருக்கு 2 கப் இலவசமாகவும், சர்க்கரைக்கும் 2 கப் இலவசமாகவும், மொத்தம் 4 கப் காடர்கள் அணிக்கு கிடைத்தது.

இந்த அணியின் ஆண் போட்டியாளர்கள் காசு கம்மியாக இருப்பதால், கடைக்காரனை ஏமாற்றி பொருளைத் திருடி விடலாம் என்று திட்டம் தீட்டினர். ஆனால் அந்த கடைக்காரனை பார்த்தால், அவனே வேறு ஒருவரிடம் பணிபுரிவது போல் இருந்ததால், அப்படி ஏதும் அவனிடமிருந்து எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ஒதுங்கி விட்டனராம்.

இவ்வாறாக காடர்கள் அணி விருந்து உண்டும், ஷாப்பிங் செய்தும் மகிழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேடர்கள் அணியில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லாமல் வழக்கம் போல் இருந்தது.

பீஸ்ட் படம் கூர்க்கா பட கதைதானே.. அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் டிரென்டிங் நம்பர் 1 என்ற இடத்தை ...