காசு வாங்கிட்டு தானே படத்துல நடிக்கிற.. சிம்புவை கிழித்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அவர்களது பொது வாழ்க்கையைப் பற்றியும் ரகசிய வாழ்க்கையைப் பற்றியும் பல கிசுகிசுக்களை இணையத்தில் வெளிப்படையாக பேசி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இந்த நிலையில் தற்போது எஸ்டிஆர் என்ற பட்டத்தோடு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிம்புவை பற்றிய ஒரு தகவலை பயில்வான் ரங்கநாதன் தற்போது வெளியிட்டுள்ளார்.

தனக்கெனத் தனி பிரத்தியேக நடிப்பு திறமையை கொண்ட சிம்பு பல சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வது வழக்கம். அதிலும் முக்கியமாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு புதிய நடிகைகள் வந்தாலும் அவர்களோடு சிம்புவை வைத்து கிசுகிசுக்கள் வெளியாகும் அளவிற்கு சிம்பு பிரபலமானவர். இது மட்டுமின்றி பல இயக்குனர்களுடனும் சிம்புவிற்கு மோதல் இருப்பதும் பலர் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் இயக்குனர் ஹரிக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட மோதல் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பேசி உள்ளார்.

2004ஆம் ஆண்டு நடிகர் சிம்பு, நடிகை சோனியா அகர்வாலின் நடிப்பில் வெளியான கோவில் திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயற்றினார். அந்த ஆண்டுக்குரிய சிறந்த படமாக கோவில் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த இப்படத்தில் காதலுக்கு மதம் முக்கியமில்லை மனசுதான் முக்கியம் என அழுத்தமான கதைகளத்தோடு இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கி இருப்பார். இந்த நிலையில் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவிடம் இயக்குனர் ஹரி கோபமாக நடந்து கொண்டாராம்.

பொதுவாகவே நடிகர் சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக தான் வருவார் என பல பட இயக்குனர்கள் படக்குழுவினர்கள் தெரிவித்திருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் நடிகர் சிம்பு கோவில் படப்பிடிப்பிற்கு எப்போதுமே தாமதமாக வருவாராம். ஆனால் இயக்குனர் ஹரி தான் நினைத்த நேரத்திற்குள் படத்தினை முடித்து கொடுக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பவர். இதில் எப்போதுமே சமாதானம் செய்து கொள்ள மாட்டாராம்.

இதனால் இயக்குனர் ஹரிக்கு சிம்பு லேட்டாக வருவதால் பயங்கரமாக கோபம் வருமாம்.
இதனிடையே ஒருமுறை தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ஹரி, உதவி இயக்குனர்களை திட்டுவதை போல சாடை மாடையாக சிம்புவை திட்டினாராம். காசு வாங்கிட்டு தான படத்துல வேலை பாக்குறீங்க சரியான நேரத்துக்கு ஷூட்டிங்கிற்கு வர முடியாதா என காட்டமாக சிம்புவிற்கு முன்னாள் திட்டினாராம் இயக்குனர் ஹரி.

இதை அறிந்து கொண்ட சிம்பு இந்த படத்தின் வெற்றிக்கு பின்பும் இயக்குனர் ஹரியோடு இன்றுவரை கை கோர்க்காமல் உள்ளார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார். தற்போது வரை திருமணம் ஆகாமல் இருக்கும் சிம்பு ஓடிடியில் ஒளிபரப்பாகி இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமலஹாசனுக்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் யானை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தின் அப்டேட்கள் இன்னும் வெளிவராத நிலையில் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக இயக்கி வருகிறாராம் இயக்குனர் ஹரி.