காக்க காக்க வில்லன் பாண்டியவால் பலகோடி நஷ்டம்.. மீள முடியாமல் தவித்து வரும் பிரபலம்

சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகர் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தாலே போதும் ரசிகர்கள் அந்த நடிகரை இறுதி வரை மறக்க மாட்டார்கள்.

அப்படி ஒரு நடிகர் தான் ஜீவன். சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தில் கொடூர வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் ஜீவனை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். காக்க காக்க படத்தில் ஜீவன் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் அந்த அளவிற்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரமாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து ஜீவன் நாயகனாக நடித்த திருட்டு பயலே, நான் அவன் இல்லை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெற்று தந்தது. ஆனால் அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லி கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஜீவனும் திரையுலகில் இருந்து காணாமால் போய்விட்டார் என்று தான் கூற வேண்டும்.

தற்போது ஜீவன் குறித்த சில தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஒவ்வொரு நடிகரும் திரையில் எப்படி இருப்பார்களோ அப்படியே சொந்த வாழ்க்கையிலும் இருப்பார்கள் என்பது கிடையாது. அந்த வகையில் ஜீவன் நிஜ வாழ்க்கையில் பயங்கரமாக குடிப்பாராம்.

கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த ஜீவன் தான் குடிப்பதற்காக தனக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு கடையில் இருந்து ரம்மை வரவழைத்து குடிப்பாராம். ஆனால் அவர் குடிக்கு அடிமை கிடையாதாம். இருப்பினும் நன்றாக குடிப்பாராம். இந்நிலையில் தான் இயக்குனர் சக்தி சிதம்பரம் நடிகர் ஜீவனை வைத்து ஜெயிக்கிற குதிரை எனும் படத்தை இயக்கி உள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டே தயாரான இப்படம் தற்போது வரை வெளியாகவே இல்லை. இந்த படத்தால் சக்தி சிதம்பரத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டமாம். தற்போது வரை அந்த நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருகிறாராம். படத்துக்கு ஜெயிக்கிற குதிரைனு தலைப்பு வைச்ச இயக்குனர் இப்படி தோல்வி அடைந்துட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.