கஷ்ட காலத்தில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்த குஷ்பூ.. நன்றி மறக்காத பிரபல நடிகை

நீங்க நினைக்குற பூஜா இல்ல இவங்க சீரியல் நடிகை பூஜா.சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில் வாழ்வில் நடந்த சில சூழலகளை எடுத்துக்கூறினார்.

கல்கி குங்குமம் போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பூஜா. தமிழ் மக்களில் பலருக்கும் வில்லியாக தோற்றமளித்த நடிகை பூஜா உண்மையில் அப்படி இல்லையாம்.

கத்தி கத்தி சண்டை போடுவது எல்லாம் தனக்கு பிடிக்காத ஒன்று என்றும். எப்போதும் யார் மேலாவது கோபம் என்றால் தனியாக ஒரு ஓரமாய் அமர்ந்து தன்னுடைய பிரச்சினைகளை குறித்து சிந்திப்பேன் என்றும் கூறினார்.

மேலும் கல்கி என்கிற சீரியலில் நடித்த தருணம் தனது அப்பாவை இழந்து விட்டதாகவும் அதற்கு பிறகு அதையே நினைத்து தன் உடலை வருத்திக்கொண்டதாகவும் கூறினார். அப்போது இருந்த மோசமான நிலையில் இருந்து தன்னை மீட்டெடுத்தது நடிகை குஷ்பு தான் என்றும்.

மேலும் குங்குமம் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பும் குஷ்பு பெற்று தந்தது தான் என்றும் கூறினார். அவரை சந்தித்து 4 வருடங்கள் ஆகிவிட்டது என்றும் கூறினார்.

கடைசியாக ஒரு திருமண நிகழ்வில் சந்தித்தபோது தன் கண்களை கையால் மறைத்துக்கொண்டு தான் யாரென கண்டுபிடிக்க கூறினாராம் குஷ்பு. இப்படியாக ஒரு தோழமையாக ஒரு இன்ஸ்ப்ரேசனாக என் வாழ்வோடு கலந்தவர் குஷ்பு என்று கூறினார்.

மேலும் தனது இன்ஸ்டா பக்கங்களில் ரசிகர்கள் பலரும் அவரவர் தரப்பு கமாண்டுகளை இடுவதாகவும் அது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறினார். மேலும் தன்னை இந்த அளவு ரசிப்பார்கள் என நினைத்து பார்க்கவே இல்லை என்றும் கூறினார்.

இப்போது ஜி கன்னடாவில் ஸ்டைலி ஸ்டாக இருப்பதாகவும் கூறினார். மேலும் தானும் சகோதரனும் சேர்ந்து வைத்திருக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் காஸ்டியூம் டிசைனராக இருப்பதாகவும் கூறினார்.

மேலும் தனது ரசிகர்கள் பலருக்கும் இருப்பது போல தனக்கும் விரைவில் திரையில் வர ஆசைதான் என்றும் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து முயற்ச்சிப்பதாகவும் கூறினார்.