கவுண்டமணி, செந்திலுக்கே டஃப் கொடுத்த வெண்ணிறாடை மூர்த்தி.. 3 தலைமுறை நடிகருக்கு என்ன ஆச்சு

சினிமா துறையில் ஒருவரின் நடிப்பு காலம் கடந்து பேசப்பட்டால் அவர் உண்மையான திறமையான நடிகர் என்று சொல்லலாம். அப்படி பல நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஒதுங்கி இருக்கின்றனர். அப்படி ஒதுங்கி இருக்கக் கூடிய நடிகர்கள் அவர்கள் நடிக்கும் காலத்தில் பெற்ற பேரும், புகழும் அவர்களை மீண்டும் திரைத்துறைக்கு அழைத்து வரவேண்டும் என்று இழுக்கத்தான் செய்யும்.

அப்படி ஒரு காலத்தில் காமெடியில் கொடி கட்டி பறந்தவர் தான் வெண்ணிறாடை மூர்த்தி. அனைத்து தலைமுறை நடிகர்களுடன் நடித்த அனுபவம் இவருக்கு உண்டு. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என தற்கால நடிகர்கள் வரை இவர் நடிக்காத நடிகர்களே இல்லை என்பது அளவிற்கு அனைத்து காலத்திற்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு தன்னுடைய வித்தியாசமான காமெடியால் மக்கள் மனதை வென்றவர்.

குறிப்பாக மற்ற காமெடி நடிகர்கள் அவர்களுக்கு உரித்தான பாணியில் காமெடி செய்யும்போது, வெண்ணிறாடை மூர்த்தி மட்டும் டபுள் மீனிங் எனும் பாணியை கையில் எடுத்துக்கொண்டு அந்த பாணியில் நகைச்சுவை செய்து மக்களை மகிழ்விப்பார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சினிமாவில் கழித்த இவர் தற்போது சினிமாவை விட்டு வயது மூப்பு காரணமாகவும் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டும், திரைத்துறையை விட்டு ஒதுங்கிவிட்டார்.

80 வயதாகிய இவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றும, வயது மூப்பின் காரணமாக பழையப்படி அவரால் இயங்க முடியவில்லை என்ற காரணத்தினாலும் நடிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டு ஓய்வெடுத்து கொண்டு இருக்கிறார். இருந்தாலும் இவருடைய வித்தியாசமான நடிப்பிற்காக இப்பொழுதும் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் அவர் அவை அனைத்தையும் தவிர்த்து வருகிறாராம்.

ஏனென்றால் இவர் வெறும் காமெடி கதாப்பாத்திரம் மட்டுமின்றி குணச்சித்திர வேடம், வில்லன் வேடம், கதாபாத்திர நகர்வு என அத்தனை வேடங்களையும் அட்டகாசமாக நடிக்கக் கூடியவர். ஒரு காலத்தில் காமெடியில் கொடி கட்டிப் பறந்த கவுண்டமணி செந்தில் மிகப்பெரிய அளவில் போட்டியாக வந்த காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர். அவர்களோடு இணைந்து வரக்கூடிய காட்சிகளில் கூட இவர் தனித்து தெரிந்து மக்களிடம் கைத்தட்டல் பெறுவார்.

இப்படிப்பட்ட நடிகர் வயது மூப்பின் காரணமாக நடிக்காமல் ஒதுங்கி இருப்பதற்கு முக்கிய காரணம் அவருடைய குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இனிமேல் நீங்கள் நடிக்க வேண்டாம் நீங்கள் நடித்ததெல்லாம் போதும் நீங்கள் தற்போது ஓய்வெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

அதனால் நன்றாக ஓய்வெடுங்கள் என்று கூறி கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் மனைவியுடன் குழந்தைகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். இன்றளவும் அவர் நம் நினைவில் நிற்பதற்கு அவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் கச்சிதமாக அவருக்கு பொருந்தி நம்மை ரசிக்க வைத்ததால் தான், நாம் இன்றும் அவரை மறக்கவில்லை.