கவுண்டமணியை போல கண்டிஷன் போடும் செந்தில்.. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா.?

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக மக்கள் மனதை கவர்ந்தவர்கள் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இதில் வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்கள்.

அப்போது காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி, செந்தில் இருவரும் திரையில் வந்தாலே ரசிகர்கள் மகிழ்ச்சி ஆகிவிடுவார்கள். அப்போதைய காலகட்டத்தில் ஹீரோவை விட கவுண்டமணி, செந்திலின் கால்ஷீட்டுக்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்து இருப்பார்கள்.

கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர்களை கவுண்டமணி பெற்று உள்ளார். பல வருடங்களாக இவர் சினிமாவில் நடிக்காமல் ஓய்வு எடுத்து இருந்தார். தற்போது பல இயக்குனர்களிடம் இருந்து கவுண்டமணி கதை கேட்டு வருகிறாராம்.

அதிலும் கவுண்டமணி வைத்து ஹீரோவாக எடுத்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தற்போது மக்களிடத்தில் பழைய காமெடிக்கு வரவேற்பு இருக்குமா என்பது சந்தேகம்தான். தற்போது ட்ரெண்ட் மாறியுள்ளது. இதனால் கதைக்கு ஏற்றவாறு ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறார் கவுண்டமணி.

அதேபோல் நகைச்சுவை நடிகர் செந்தில் தற்போது வெப்சீரிஸ் நடித்து வருகிறார். செந்தில் கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் ராசாத்தி என்ற சீரியலில் செந்தில் நடித்திருந்தார். கொரோனா பரவல் காரணமாக இத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் செந்தில் திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

கவுண்டமணி கூட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார், ஆனால் செந்தில் நடித்ததில்லை. இப்போது செந்திலும் ஹீரோவாக நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறாராம். கவுண்டமணி, செந்தில் இருவரையும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இவர்கள் இருவருமே ஹீரோவாக நடிக்க உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.