கவின் படத்திற்கு வந்த புது சிக்கல்.. கடைசிவர ஹீரோவாக்க விட மாட்டாங்க போல

கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ரசிகர் கூட்டத்தை பிடித்தவர். இதற்கு முன்பு சத்ரியன் மற்றும் நட்புனா என்னனு தெரியுமா என்ற சில திரைப் படங்களில் நடித்தவர்.

தற்பொழுது கவின் மற்றும் அமிர்தா இணைந்து நடிக்கும் லிப்ட் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது . ஈக்கா என்டர்டெயின்மென்ட் மூலம் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை லிப்ரோ புரொடக்ஷன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது .

அதில் 50 சதவீதம் முன் பணம் செலுத்தி மீதமுள்ள தொகையை படம் வெளிவந்த பிறகு செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்பொழுது படம் வெளியீட்டிற்கு தயாராகும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அழைப்புகளை ஏற்கவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். ஆனால் கடந்த ஒரு மாதமாக தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளனர். இந்த பிரச்சனையை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம் இருந்தாலும் எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

ஆனால் திடீரென தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக வேடிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். லிப்ட் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரோடக்சன் நிறுவனத்திடம் தான் உள்ளது என்பதை நினைவு கூறுவதாக லிப்ரா  புரொடக்ஷன்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில்சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்தின் புதிய சிக்கல் அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சிவாஜி லவ் பண்ணி வேலை செய்த 5 இயக்குனர்கள்.. ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் படம்

சினிமாவில் நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று ரசிகர்களால் புகழப்பட்ட சிவாஜி கணேசன் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் பல தலைமுறை இயக்குனர்களுடனும் பணிபுரிந்திருக்கிறார். அதில் சில குறிப்பிட்ட இயக்குனர்களை அவருக்கு ...
AllEscort