கவர்ச்சி காட்டியே பட வாய்ப்புகளை அள்ளிய தர்ஷா குப்தா.. பொறாமையில் இருக்கும் சீரியல் நடிகைகள்

தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்புக்காக பலரும் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள் கூட தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாய்ப்புத் தேடி வருகிறார்கள்.

அதேபோல் சின்னத்திரையில் இருந்த நடிகைகள் பலரும் வெள்ளித்திரைக்கு சென்றுள்ளனர். சொல்லப்போனால் சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜன் சின்னத்திரை தொடர்களில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் தர்ஷா குப்தாவும் இணைந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் மூலம் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. அதன்பிறகு பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அதன்பிறகு குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக பங்குபெற்று ஏராளமான ரசிகர்களை பெற்றார். இதை தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு ரிச்சர்ட் நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தர்ஷா குப்தா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். இவர் அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். நீச்சல் குளத்தில் கவர்ச்சி,  டாட்டூ குத்துதல் என அவருடைய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

படங்களின் வாய்ப்புக்காக தர்ஷா குப்தா காட்டிய கவர்ச்சி வீண்போகவில்லை. இவர் தற்போது மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனால் தர்ஷா குப்தா காட்டிய கவர்ச்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. இதனால் பல சின்னத்திரை நடிகைகளும் தர்ஷா குப்தா போல் கவர்ச்சி காட்டி வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடுகிறார்கள்.