கழுத்தை நெரிக்கும் கடன்.. ஒரே படத்தால் நாலாபக்கமும் மாட்டி முழிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த ப்ராஜெக்டுகளில் பிசியாக இருக்கிறார். ஆனால் அவரின் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் உருவான அயலான் திரைப்படம் மட்டும் இன்னும் சிக்கலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அந்த திரைப்படத்தை ஆர் டி ராஜா தயாரித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டில் தான் முடிவடைந்ததாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் அதன் பிறகும் கூட படத்தில் பல காட்சிகளுக்கு சிஜி ஒர்க் இருப்பதாக படத்தின் எடிட்டர் கூறியிருந்தார். மேலும் பாலிவுட்டிலும் இப்படம் வெளியாக இருப்பதாகவும் அதற்காகத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருவதாகவும் பட குழு தரப்பில் இருந்து கூறப்பட்டது.

அதனால் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தான் பெரிதும் நம்பி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் உலக அளவில் பிரபலம் அடைவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் படம் தற்போது வெளியாக முடியாத நிலையில் இருப்பதால் அவர் மிகுந்த கவலையில் இருக்கிறாராம்.

ஆர் டி ராஜா உடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு இந்தப் படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் அவர் பைனான்சியர்களிடம் பணத்தை கடனாக பெற்று தான் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

அதன் காரணமாக இந்த படத்தை எப்படியாவது விரைவில் வெளியிட வேண்டும் என்று அவர் திட்டமிட்டுள்ளார். ஆனாலும் நாலா பக்கமும் இந்த படத்தை வெளியிட முடியாத அளவுக்கு பிரச்சனை குவிந்து கொண்டிருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் சிவகார்த்திகேயன் முழித்துக் கொண்டிருக்கிறாராம்.

சிம்புவுக்கு சிபாரிசு செய்த ஹன்சிகா.. இணையத்தில் கசிந்த தகவல்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இப்படத்தை தொடர்ந்து வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், சிங்கம்-2, ...