கழட்டிவிட்ட தனுஷ்.. இளம் இயக்குனருக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களின் டெஸ்டில் இருப்பவர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன். தனுஷால் சினிமாவுக்குள் வந்து இருந்தாலும் தற்போது சிவகார்த்திகேயன் வளர்ச்சி அபரிதமாக உள்ளது என்பது கோலிவுட்டில் அனைவரும் அறிந்த உண்மை.

அதுவும் சமீபத்தில் வந்த டாக்டர் திரைப்படம் வெறும் 50% பார்வையாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருவது சிவகார்த்திகேயன் நட்சத்திர நடிகராக உருவெடுப்பது வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இது முன்னணி நடிகர்களை கொஞ்சம் ஆட்டம் காண வைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இது ஒருபுறமிருக்க நல்ல நல்ல கதையம்சம் கொண்ட இயக்குனர்களை தேடித்தேடி வாய்ப்பு கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் ஜாலியாக நடித்தால் தான் படம் ஓடும் என்பதை அப்படியே மாற்றி விட்டார் நெல்சன்.

இதனால் தற்போது எப்படிப்பட்ட படம் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் சிவகார்த்திகேயனுக்கு இருப்பதால் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் என்டர்டைன்மென்ட் மட்டுமல்லாமல் நல்ல தரமான கதைகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறுகின்றனர்.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற படங்களை இயக்கிய ராம்குமார் அடுத்ததாக வால்நட்சத்திரம் என்ற பெயரில் தனுஷுக்காக கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக கதை எழுதி வருகிறார். தனுசும் சீக்கிரம் கதையை முடித்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இவரது பணி இன்னமும் முடியாமல் தனுஷின் அடுத்தடுத்த படங்களுக்கு சிக்கலை உண்டாக்கி வருகிறது. இதனால் இப்போதைக்கு ராம்குமார் படம் வேண்டாம் என ஒதுக்கி விட்டாராம் தனுஷ்.

இது தான் சரியான தருணம் என தனுஷ் கைவிட ராம்குமாருக்கு தேடிச் சென்று வாய்ப்பு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். கண்டிப்பாக சிவகார்த்திகேயன் கேரியரில் ராம்குமார் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் வாரிக் குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.