கல்யாணம், காதுகுத்துனா போதும்.. காசுக்காக விஜய், அஜித்தை அசிங்கபடுத்தும் தயாரிப்பாளர்

ரஜினி, அஜித், விஜய், சூர்யா என்ற பெரிய நடிகர்கள் படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி பெற்றாலும் வசூல் ரீதியில் தயாரிப்பாளர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. இப்போலாம் படங்கள் தியேட்டர்களில் வருவது குறைவு அதுவும் உச்ச நட்சத்திரங்கள் படங்கள் வருவது மிக குறைவு. அதையும் மீறி கடந்த வருடம் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து வசூலை வாரி குவித்தது.

தயாரிப்பாளர், கே ராஜன் எப்பொழுதும் அவர் மனசுல பட்டத யாரா இருந்தாலும் எங்கிருந்தாலும் பேசி விடுவார். இதற்கு முன்னாடி விஜய் துதி பாடியவர். இப்பொழுது அஜித்தையும் விட வில்லை தோல்வி படத்தை கொடுத்த அஜித் தனது சம்பளத்தை 100 கோடி அதிகமாக கேட்கிறார். ஏற்கனவே விஜய் சம்பளம் ரூ 100 கோடியை தாண்டி விட்டது.

யாரு மேல உள்ள கோவத்தை விஜய், அஜித்திடம் காட்டிக் கொண்டிருக்கிறார் என்று தெரியல. எங்க போனாலும் சரி அதே கல்யாணமா, காதுகுத்து, இல்ல கருமாரி, இல்ல சினிமா விழாவா எதா இருந்தாலும் இவங்க ரெண்டு பேரையும் வச்சு செய்றது இவருக்கு வேலை. இவர் பேசினா எல்லாரும் ரசிக்கிறாங்க, கை தட்டுறாங்க அப்படின்னு வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

இவரு பேசுனத பயில்வான் ரங்கநாதன் அசிங்க படுத்துற மாதிரி கேள்வி கேட்டு இருக்கார். கே.ராஜனுக்கு வயசாயிடுச்சுல அதனால எல்லாம் மறந்திருச்சு போல, அதான் வாய்க்கு வந்த படி பேசுறாரு. தமிழ் சினிமாவுல நடிகர்கள் தன் சம்பளத்தை எப்போதுமே அதிகமாக கேட்க மாட்டார்கள். இந்த தயாரிப்பாளர்கள்தான் நடிகர்களை அதிக பணத்தை கொடுத்து அழைப்பது.

தோல்வி படத்தை கொடுத்த நடிகர்களை, அதே சம்பளத்தை கொடுத்து அவர்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.. இது இப்போது இல்லை முன்னாடியே ஏவிஎம் சரவணன், முக்தா சீனிவாசன், என்று பல தயாரிப்பாளர்கள் இதை பண்ணிருக்காங்க. அதுக்கு முன்னாடியே எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் நடந்திருக்கு..

பாலும் பழம் படத்துல சிவாஜி சம்பளம் 7 லட்சம் படத்தோட பட்ஜெட் 4 லட்சம் இது எனக்கு தெரியும் அவருக்கு ஏன் தெரியல. இல்ல பேசணும்னு பேசுராரா, உங்களுக்கு வேணும்னா அவங்க கால்ல விழுந்து காசு கொடுத்து படத்தில் நடிக்க வைக்கிறீர்கள் கடைசில அவங்கள போய் தேவை இல்லாமல் திட்டுறீங்க. இது ரொம்ப தப்பு கே.ராஜன் அவர்கள் வயதில் மூத்தவர் இதைப் புரிந்துகொண்டு இந்த பேச்சை இனிமேல் நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லனா நீங்க திருந்துங்க நடிகர்களை கூப்பிடாதீங்க.