விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல் டிஆர்பி ரேட்டிங்கிலும் விஜய் டிவி முதலிடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இத்தொடர் நெட்டிசன்கள் பலரது ட்ரோல்களுக்கு ஆளானாலும், டிஆர்பியில் டப் இடத்தை பிடித்து விடுகிறது.

இத்தொடரில் நடித்து வரும் நாயகன் மற்றும் நாயகி பிரபலமாக இருக்கிறார்களோ இல்லையோ? இத்தொடரில் வில்லியாக நடித்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை ஃபரீனா பலரது கவனத்தையும் தன் பக்கம் திசை திருப்பியுள்ளார். ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஃபரீனா தற்போது இத்தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக மாறியுள்ளார்.

மேலும் பாரதிகண்ணம்மா தொடரில் இவரது கதாபாத்திரம் பலரது பாராட்டை பெற்று வருகிறது. அந்த அளவிற்கு இவர் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் போட்டோ ஷூட்டில் அதிக ஆர்வம் காட்டி வரும் ஃபரீனா சமீபகாலமாக தனது கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சிலர் எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அவ்வாறு ரசிகர் ஒருவர் தெரிவித்த எதிர்மறையான கருத்துக்கு பதிலளித்த ஃபரீனா மிகவும் கேவலமாக பேசி கமெண்ட் செய்துள்ளார். அதாவது அந்த நபர், “கர்ப்ப காலத்தில் ஏன் இத்தனை போட்டோ ஷூட்? ஏதோ இந்த உலகத்திலேயே நீ மட்டும் தான் கர்ப்பமா இருக்குற மாதிரி” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த ஃபரீனா, “நான் மாடலிங் துறையை சேர்ந்த பெண். குண்டா, ஒல்லியா, உடல்நிலை சரியில்லாம அல்லது கர்ப்பமானு எப்படி இருந்தாலும் இது என்னுடைய வேலை நான் செய்கிறேன். இதுல உங்க சூ** ஏன் எரியுது” என கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பதில் சற்று அசிங்கமாக இருந்தாலும், போட்டோ எடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். அதை மற்றவர்கள் விமர்சிப்பதற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.