கமெர்ஷியல் செண்டிமெண்ட் மசாலா- நானியின் டக் ஜெகதீஷ் விமர்சனம்

கமெர்ஷியல் கலந்த அதே நேரத்தில் சற்றே வித்யாசமான கதைக்களம் அல்லது கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடித்து டோலிவுட்டை கலக்கி வருபவர் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி. இவர் நடிப்பில் சிவ நிர்வானா இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி உள்ள படமே “டக் ஜெகதீஷ்”.

கதை –  ஊர் தலைவர் நாசர் அவரது மகன்கள் ஜெகபதி பாபு மற்றும் நானி. ஊருக்கு நடக்கும் நல்லதை தடுக்கும் எதிர் தரப்பில் டேனியல் பாலாஜி. வெளியூரில் இருந்து அவ்வப்பொழுது தன் ஊருக்கு வந்து செல்பவர் தான் நானி.

நாசர் இறப்புக்கு பின், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜியுடன் கூட்டணி சேருகிறான், தன் தங்கைகளுக்கு சொத்து கிடையாது, நீங்கள் இரண்டாம் தாரத்தின் மகள்கள் என ஒதுக்குகிறான்.

இந்த சூழ்நிலையில் வெளிநாடு செல்வார் ஹீரோ என எதிர்பார்த்த நேரத்தில், தனது சொந்த ஊருக்கே வருவாய்த்துறை அதிகாரியாக வருகிறார். மக்களுக்கு நல்லது செய்கிறார், அண்ணனை திருத்துகிறார், வில்லனை அழிக்கிறார், தவறுதலாக புரிந்துகொண்ட அம்மா மற்றும் சகோதரிகளுடன் மீண்டும் இணைகிறார்.

சினிமாபேட்டை அலசல்– பெரிய திரையில் பார்த்து மகிழவேண்டிய பக்கா கமெர்ஷியல் தெலுங்கு  படம். நானி என்ற நபரை சுற்றி தான் முழு கதையும். வித்யாசமான மேனரிசம், காதல், காமெடி, ஆக்ஷன், எமோஷன் என நானி மட்டுமே நம் கண் முன் நிற்கிறார். துணை கதாபாத்திரங்களின் தேர்வும், நடிப்பும் அருமை.

பாடல்கள் படத்திற்கு மைனஸ், எனினும் ஒளிப்பதிவு, பின்னணி இசை மிகப்பெரிய ப்ளஸ். ஊரின் மீது பாசம் மற்றும் உறவுகள் மீது நேசம் என சொல்லும் பல படங்கள் வெளியாகி உள்ளது,  அவற்றுடன் ஒப்பிடும் பொழுது சற்றே ஏமாற்றத்தையே தருகிறது இப்படம் .

சினிமாபேட்டை வெர்டிக்ட்– இப்படம் நானி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் , மற்றவர்களுக்கு மீண்டும் OTT தலத்தில் ஒரு சுமாரான படமாக இது தோன்றும்.

சினிமாபேட்டை ரேட்டிங்  2 .75 / 5