கமல் வயது நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்.. காசுக்காக இப்படியுமா!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். வாரிசு நடிகைகளில் ஒருவரான இவர் ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவின் மூலம் பெயரும் புகழும் பெற்றார். அதன் பிறகு சூர்யா மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான ஏழாம் அறிவு படம் இவருக்கு தமிழில் அறிமுகப் படமாக அமைந்தது.

அறிமுகப் படமே 100 கோடிக்கு மேல் வசூலை குவித்த நிலையில் அடுத்தடுத்து விஜய், அஜித் போன்றோருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஆனால் இடையில் காதல் சர்ச்சைகளில் சிக்கி மாட்டிய ஸ்ருதிஹாசன் கொஞ்ச காலம் சினிமாவிலிருந்து நடிப்பதில் ஒதுங்கிக் கொண்டார்.

தற்போது புதிய காதலருடன் வரம் வரம் ஸ்ருதிஹாசன் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்தவகையில் அவருக்கு தெலுங்கு சினிமா மார்க்கெட் மீண்டும் ஒரு நல்ல வரவேற்ப்பை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தெலுங்கில் மட்டுமே கைவசம் பல படங்கள் வைத்துள்ளார்.

நடிகைகள் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க பெரிய அளவு சம்பளம் பேசி ஒப்பந்தம் ஆவார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். அதே வேலையைத்தான் தற்போது ஸ்ருதிஹாசன் செய்துள்ளார். தனது அப்பா கமலஹாசன் வயது உள்ள தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்ருதிஹாசனுக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுத்துள்ளார்களாம். இதைக் கேள்விப்பட்ட கோலிவுட் வட்டாரம் இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் மார்க்கெட் மீண்டும் சரிவை நோக்கிச் செல்லப் போகிறது என எச்சரிக்கை கொடுக்கிறார்களாம். ஆனால் இருக்கும் வரை சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் சுருதிஹாசனின் ரூட்.