கமல், ரஜினி இணைந்து நடித்த 6 படங்கள்.. வில்லனாக மிரட்டிய சூப்பர் ஸ்டார்

இருபெரும் ஜாம்பவான்களான கமல், ரஜினி தமிழ் சினிமாவை கலக்கி வந்தார்கள. இவர்கள் இருவரும் தனக்கென்று ஒரு பாணியை தேர்ந்தெடுத்து படங்கள் நடித்தனர். ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து நடித்த படங்களை பார்க்கலாம்.

மூன்று முடிச்சு: 1976 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூன்று முடிச்சு. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் ,ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருந்தார்.

16 வயதினிலே: தமிழ் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பம் ஒன்றை உருவாக்கிய திரைப்படம் 16 வயதினிலே . கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியானது. இப்படத்தில் கமலின் சப்பானி கதாபாத்திரமும், ஸ்ரீதேவியின் மயிலு கதாபாத்திரமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

இளமை ஊஞ்சலாடுகிறது: ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த், ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். 1978 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அவள் அப்படித்தான்: 1978 ஆம் ஆண்டு ஸ்ரீருத்ர இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அவள் அப்படித்தான். இத்திரைப்படத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் சிவசந்திரன் நடித்துள்ளனர். இப்படத்தில் தமிழில் வெளியான கடைசி கருப்பு வெள்ளை திரைப்படம்.

அலாவுதீனும் அற்புத விளக்கும்: 1979ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் ஐ வி சசி. கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, ஜெயபாரதி நடித்திருந்தார்கள். இப்படத்தில் கமல்ஹாசன் அலாவுதீன் ஆக நடித்து இருந்தார்.இப்படத்தில் பூதம் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இத்திரைப்படம் வெற்றி பெற்றது.

நினைத்தாலே இனிக்கும்: 1979 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் கமலஹாசன், ஜெயப்பிரதா, ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் இயக்குனர் கே பாலச்சந்தர்.தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தின் இசை எம்எஸ் விஸ்வநாதன்.

தனுஷை அலங்காரபடுத்த ஆகும் செலவு என்ன தெரியுமா? கேட்டதும் தலை சுத்திய தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் கடின உழைப்பின் மூலம் நிலையான இடம் பிடித்தவர் நடிகர் தனுஷ். இவர் நடித்த முதல் படத்திலிருந்த தோற்றத்தைப் போலவே சற்றும் மாறாமல் அதே உடலமைப்பை உடன் இன்றும் இருக்கிறார். அதேபோல் தனுஷ் ...