அரிமா நம்பி, இருமுகன், நோடா தொடர்ந்து இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள படம். பாடல்கள் தமன், பின்னணி இசை சாம் சி எஸ், ஒளிப்பதிவு ஆர் டி ராஜசேகர், எடிட்டிங் ராயமண்ட் டி கோஸ்டா என செம்ம ஸ்ட்ராங் ஆன டெக்கினிக்கல் டீம். விஷால் மற்றும் ஆர்யா இருவரும் ஹீரோ, வில்லன் என்பதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக மிக அதிகம். ஆனால் பெரும்பாலான ரசிகர்களுக்கு படம் ஏன் பிடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை வாங்க பார்ப்போம்.

கதை – சிறுவயதில் அடுத்தடுத்த வீடு, விஷாலின் அப்பா ஒதுங்கி செல்லும் நல்லவர், ஆர்யாவின் அப்பா பிரகாஷ்ராஜ் மகனை போலீஸ் ஆக்கும் கனவுடன் இருப்பவர். இரண்டு குழந்தைகளுக்கும் ட்ரைனிங் கொடுக்கிறார், துப்பாக்கி பயிற்சி உட்பட. ஆனால் குட்டி வயது ஆர்யாவுக்கு வெறுப்பே அதிகமாக உருவாகிறது. (ஆளவந்தான் ஞாபகம் வருகிறது நமக்கு, கூடவே எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.)

வருடங்கள் கடக்க விஷால் சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்துகிறார், ஆர்யா சர்வதேச லெவலில் தேடப்படும் தடயம் இல்லாத ஹிட் மேன். இருவரும் மீண்டும் சந்திக்கும் காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. (சிங்கப்பூர் காட்சிகள் பல நமக்கு தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை நினைவு படுத்துகிறது.)

விஷால் நாட்டை, மக்களை காப்பாத்த போராடுவார், ஆர்யா உலகையே அழிக்கும் பிளான் போடுவார்; நமக்கு ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல் ஆக்ஷன் படம் கிடைக்கப்போகிறது என நாம் நினைக்கும் நேரத்தில் தான் திரைக்கதை நம்மை ஏமாற்றுவிட்டது. சிறுவயதில் மெச்சூரிட்டி அதிகமாக உள்ள விஷால் மற்றும் ஆர்யா, வாலிப வயதில் சிறுபிள்ளை தனமாக மோதுவது அபத்தமோ அபத்தம்.

சினிமாபேட்டை அலசல்– சிறந்த நடிகர் நடிகையர்; சூப்பர் ஆன டீம், தரமான கதைக்களம் என இருந்தும் இப்படம் சொதப்பல் தான். வழக்கமாக விஷாலுக்கு ரொமான்ஸ் காட்சிகள் வந்து போகிறது. எனினும் ஆர்யா – மம்தா மோகன் தாஸ் பகுதிகள் சூப்பர் இயக்குனரே.

ஜெட் வேகத்தில் பறக்க வேண்டிய படம், குட்ஸ் வண்டி வேகத்தில் நகர்கிறது. இன்று ஹாலிவுட் டப்பிங் படம் பார்க்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – கதைக்களம், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தாதான் காரணத்தால் இந்த enemy – empty தான்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 2.25/5