கமல் சென்டிமென்ட்டை வைத்து டீசர் வெளியிடும் லோகேஷ்.. விக்ரம் பட லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினி, கமல் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தீபாவளி அன்று வெளியாக உள்ள ரஜினியின் அண்ணாத்த படம் தான் தற்போது டாப் டிரெண்டிங்கில் உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தாக கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படம் தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அதற்கு காரணம் கமல் படம் என்பது மட்டுமல்ல விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் இணைந்துள்ளதும், இயக்குனர் மீதுள்ள நம்பிக்கையும் தான். ஆம் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் விக்ரம் படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

லோகேஷ் ஏற்கனவே மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட வெற்றி படங்களை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் விக்ரம் படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசரை வரும் நவம்பர் 7ஆம் தேதி அதாவது நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஏற்கனவே கடந்த ஆண்டு கமல்ஹாசன் பிறந்த நாள் அன்று தான் விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தாண்டு அவர் பிறந்த நாளில் விக்ரம் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். எது எப்படியோ ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து இருக்கு என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.