கமல்ஹாசன் பிக் பாஸ்5 சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். இதனை பார்த்த பிக்பாஸ் எதிர்ப்பாளர்கள் சும்மா இருப்பார்களா இந்த நிகழ்ச்சியே வேண்டாம் என கமலுக்கும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதில் கமலை தரக்குறைவாக ஜிஜி சிவா விமர்சித்துள்ளது தற்போது பலருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கமல்ஹாசன் ஒரு புத்திசாலி கட்சி ஆரம்பிக்கும் போது மக்கள் நீதி மய்யம் என மக்களை ஏமாற்றிவிட்டு தற்போது புத்திசாலித்தனமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை  தொகுத்து வழங்குவதாக கூறியுள்ளார். கட்சி ஆரம்பிக்கும் போது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்த கமல்ஹாசன் தற்போது மட்டும் ஏன் பிக்பாஸ் போன்ற கேவலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கமல்ஹாசன் பிக் பாஸ் 5 சீசன் தொடங்கும் முன்பு பாரம்பரிய ஆடைகள் தான் பயன்படுத்துவார்கள் என கூறியிருந்தார். ஆனால் தற்போது கேவலமான ஆடைகளை கமல்ஹாசன் உட்பட அனைவரும் அணிந்து வருவதாக ஜிஜி சிவா விமர்சித்துள்ளார். அதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் கமல்ஹாசன் கோமாளி போல் உடையணிந்து வருவதாகவும் விமர்சித்தார்.

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசி வைத்துதான் நடத்திவருகின்றனர் காதல் என்ற பெயரில் கேவலமாக போட்டியாளர்கள் நடந்து கொள்வதாகவும் விமர்சித்தார். இதனை கமல்ஹாசன் கண்டிக்க வேண்டுமே தவிர அதனை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடாது எனவும் நேரடியாக விமர்சித்தார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மட்டமான நிகழ்ச்சி அதனை புரோக்கராக கமல்ஹாசன் நடந்துகொள்கிறார் எனவும் கூறினார். இதனால் கமல்ஹாசன் ஆதரவாளர்கள் மக்கள் பார்ப்பதால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். மக்கள் பார்க்காவிட்டால் அந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரமாண்டமாக யாரும் செலவு செய்து ஒளிபரப்ப மாட்டார்கள் என கூறி வருகின்றனர். மேலும் ஜிஜி சிவா வாயில் நல்லா பேசுகிறார். ஆனால் இதுவரைக்கும் அவர் என்ன நல்லது செய்து விட்டார் என கேள்வி கேட்டு வருகின்றனர்.