கமலை மெய்சிலிர்க்க வைத்த லோகேஷ்.. இவருக்குள்ள இப்படி ஒரு திறமையா!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தின் ட்ரெய்லரில் விக்ரமின் எனர்ஜியை பார்த்து ரசிகர்கள் வியப்பில் உள்ளனர். இந்நிலையில் விக்ரம் படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

விக்ரம் படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் கமலைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

கமல் தனது படங்களில் அவரே மேக்கப் போட்டுக் கொள்வாராம். இந்நிலையில் விக்ரம் படத்தின் ட்ரெய்லரில் கமல் முகத்தில் ரத்தக்கறையுடன் இருப்பார். அந்த காட்சி எடுக்கும்போது லோகேஷ் கனகராஜ் உங்களுக்கு மேக்கப் போட தான் விரும்புவதாக கூறியுள்ளார். உடனே ஓகே என்று சொல்லிவிட்டு கமலும் சேரில் உட்கார்ந்து விட்டாராம்.

அன்றிலிருந்து கிட்டத்தட்ட 32 நாட்கள் கமலுக்கு லோகேஷ் தான் மேக்கப் போட்டுள்ளார். மேலும் இன்னுமொரு சுவாரசியமான தகவலையும் பகிர்ந்துள்ளார். அதாவது லோகேஷ் விக்ரம் படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கும்போது கமல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.

அதாவது சேனாதிபதி என்ற வயதான கதாபாத்திரத்தில் அதேபோன்று நடந்து வந்துள்ளார். அதை அப்படியே நேரில் பார்த்த லோகேஷ் பிரமித்துப் போய் உள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் என்ற இவரின் இயக்குனர் பெயருக்கு கீழே தயாரிப்பாளர் என்ற இடத்தில் கமலஹாசன் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த நாள் என் வாழ்விலேயே மறக்கவே முடியாது ஒன்று என கூறி உள்ளார். லோகேஷ் விக்ரம் படத்தை பற்றி பல தகவல்கள் கூற இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் கமலின் விஸ்வரூபத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

படத்திற்கு பீஸ்ட் என பெயர் வைக்க காரணம்.. சுவாரசியத்தை போட்டுடைத்த பூஜா ஹெக்டே

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ...
AllEscort