கமலுக்கு நேர்ந்த விபத்தால்.. புன்னகை மன்னன் பட வாய்ப்பை இழந்த எவர்கிரீன் 80ஸ் நடிகை!

உலக நாயகன் கமல் தனது ஐந்து வயதில் இருந்தே திரையுலகில் கால் பதித்து இன்றும் பல வெற்றிக்கனியை சுவைத்து தன்னால் இயன்றவரை நடிப்பால் மக்களை திருப்திபடுத்தி வருகிறார். இவருடன் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது அந்த கால நடிகைகள் முதல் இந்த கால நடிகைகள் வரை அவர்களின் கனவாகவே உள்ளது. அவ்வாறு நடிகை பூர்ணிமா கமலுடன் நடிக்க முடியாமல் போன வருத்தத்தை பகிர்ந்து வருகிறார்.

கவிதாலயா ப்ரொடக்ஷன் தயாரித்து வழங்கிய ‘புன்னகை மன்னன்’ திரைப்படம், இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களால் இயற்றப்பட்டு இசைச் சக்கரவர்த்தி இளையராஜா அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இசை, காதல், நாடகம் கலந்த கலவையான வெற்றி திரைப்படம்.

இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து கலக்கியது. கமல் நாயகனாகவும், ரேவதி நாயகியாகவும், நடிக்க ரேகா, டில்லி கணேஷ, சுதர்சன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளிவிழா கண்ட வெற்றிப் படம் இது. இப்படிப்பட்ட இந்த வெற்றிப் படத்திலும், இந்த வெற்றிக் கூட்டணியுடனும், முக்கியமாக கதா நாயகன் கமலஹாசன் அவர்களுடனும் நடிக்க இருந்த வாய்ப்பு ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்பதை போல கைநழுவிப் போனது என நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் கலங்கியுள்ளார்.

எவர்கிரீன் 80ஸ் இல் முன்னணி தமிழ் நடிகைகளில் குறிப்பிடத்தக்க ஒருவரான பூர்ணிமா பாக்கியராஜ் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து மிகப்பெரும் வெற்றி கண்டவர். முதலில் புன்னகை மன்னன் படத்தில் பூர்ணிமா அவர்கள் நாயகியாக நடிக்க இருந்த நிலையில் நடிகர் கமலுக்கு காலில் பெரிய அடிபட்டதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அந்த நிலையில் பூர்ணிமா அவர்கள் வேறொரு மலையாள படத்தில் கமிட் ஆகி விட்டதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய உடன் மலையாளத்தில் பிஸியாக இருந்த நடிகை பூர்ணிமா அவர்களால் புன்னகை மன்னன் படத்தில் நடிக்க முடியவில்லை.

அதன்பின் பூர்ணிமாவிற்கு பதில் நடிகை ரேவதி அந்த கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்படி சான்ஸ் கிடைத்து மிஸ் பண்ணியதை நடிகை  பூர்ணிமா நினைத்து வருத்தப்படுகிறார்.