கமலஹாசன் உச்சத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.. வியந்து பாராட்டிய பிரபல நடிகை

பல குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அம்மா கதாபாத்திரத்திலும் திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களைக் கொண்டவர் நடிகை அந்த நடிகை. 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் சுஜாதா சிவகுமார், தற்போது தான் கடந்து வந்த பாதையைப் பற்றி கூறியிருக்கிறார். மதுரையில் பிறந்த நடிகை சுஜாதா சிவக்குமார் நம் அனைவரின் வீட்டில் உள்ள சித்தி, அம்மா, அத்தை போன்று உரிமையாகவும் எதார்த்தமாகவும் மதுரை ஸ்லாங்கிலும் தன் தனித் தன்மையான குரலாலும் பேசி ரசிகர்களை கவர்ந்தவர்.

இவரது முதல் படம் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படம். பேச்சு எனும் கதாபாத்திரத்தின் மூலமாக தன்னுடைய நடிப்புத் திறமையை காட்டிய சுஜாதா சிவகுமார் கமலைப் பற்றி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். கமலஹாசன் யாரையும் தாழ்த்திப் பேசமாட்டார். தனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே சக நடிகர்களுக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் கமலஹாசன் கவனமாக இருப்பார் என்றும் தன்னை பார்த்து நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் என்று சொல்லி ஊக்கம் அளிப்பார் என்று கூறியுள்ளார்.

பிறகு தன் சினிமா வாழ்க்கையில் புரட்டிப்போட்ட திரைப்படமான இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப் படத்தில் பிரியாமணியின் தாயாராக சுஜாதா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சுஜாதா சிவகுமார் என்ற தன் பெயரை பருத்திவீரன் சுஜாதா என்று சொல்லுமளவிற்கு பெயர் வாங்கிக் கொடுத்தது மட்டுமல்லாமல், மேலும் பல விருதுகளையும் வாங்கிக் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் தாயாராக சுறா திரைப்படத்திலும் நடிகர் அஜித்தின் விசுவாசம்,வீரம் உள்ளிட்ட திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்திலும், 2014ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா திரைப்படத்தில் கணவன் இல்லாத தைரியமான பெண்ணாக நடித்து இருப்பார்.

இந்த படத்தின் மூலமாக கோலிசோடா ஆச்சி எனும் பெயரையும் கொண்டார்.இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப் படத்தில் குணசித்திர நடிகையாக நடித்து இருப்பார். இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரம் இன்றளவும் மக்களிடத்தில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறார் சுஜாதா.

பல முன்னணி நடிகர்களோடு நடித்திருந்த சுஜாதா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் தனக்கு கால்ஷீட் இல்லாததால் நடிக்க முடியாமல் போய்விட்டது என வருத்தமாக தெரிவித்தார். இருந்தாலும் கண்டிப்பாக ரஜினியுடன் நடிப்பேன் என்று உறுதியோடு கூறியிருக்கிறார்.