கன்னம் ஒட்டி, வயதான தோற்றத்திற்கு மாறிய நயன்தாராவின் புகைப்படம்.. என்ன இப்படி ஆயிட்டாங்க

தமிழ் திரையுலகில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் ஜோடி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி. நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் ஆரம்பித்த இவர்களுடைய நட்பு காதலாக மாறி தற்போது திருமணம் வரை வந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது இவர்களின் திருமண அறிவிப்பை பற்றிதான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா திருமண வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசை.

ஆனால் நயன்தாராவோ தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தயாரிப்பு நிறுவனம், சொந்தத் தொழில் என்று ஏகப்பட்ட விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இருப்பினும் தன் காதலருடன் கோவில் போன்ற இடங்களுக்கு செல்வதிலும் கவனம் செலுத்துகிறார்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் விக்னேஷ் சிவன் தற்போது திரையுலகில் பிரபலமாக இருக்கும் பால்மின் டி-ஷர்ட்டை அணிந்திருக்கிறார்.

அதற்கு ஏற்றார்போல் நயன்தாராவும் கருப்பு உடையில் அவருடன் கைகோர்த்து கொண்டு நிற்கிறார். ஆனால் அந்த போட்டோவை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏனென்றால் நயன்தாராவின் தோற்றம் கன்னம் ஒட்டி, முற்றிலும் வயதானவர் போன்று காணப்படுகிறது.

முகம் கழுத்து போன்ற பகுதிகளில் தோல் சுருக்கம் விழுந்து, உடல் மிகவும் இளைத்து பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார். ஆனால் அதற்கு அப்படியே எதிர்மறையாக விக்னேஷ் சிவன் நன்றாக வெயிட் போட்டு குண்டு பூசணிக்காய் போன்று இருக்கிறார்.

சினிமாவில் வயதான நடிகைகள் கூட இளம் நடிகைகளுக்கு போட்டியாக இளமையுடன் இருக்கின்றனர். ஆனால் 37 வயதாகும் நயன்தாரா இப்போவே 50 வயது போன்ற தோற்றத்தில் இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் நயன்தாரா தன் உடலை கவனித்துக் கொள்ளாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து விட்டார் என்றும் சில ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் காதலர் விக்னேஷ் சிவனோ நன்றாக சாப்பிட்டு இப்படி உருண்டையாக மாறிப் போயிருக்கிறார் என்று கலாய்த்து வருகின்றனர்.