கத்தி பேசுறது, கத்தியை காட்டி பேசுறதெல்லாம் விருமனுக்கு பிடிக்காது.. நெருப்பாக களமிறங்கிய கார்த்தி பட டிரைலர்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் படத்தின் டிரைலர்வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

மேலும் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், ஆர் கே சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கிராமத்து கதையை பின்னனியாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரில் அதிரடி சண்டை காட்சிகளும், கார்த்தியின் நடிப்பும் பயங்கர மாஸாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தை கார்த்தியின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர்.

வாய்விட்டு மாட்டிக்கொண்ட சந்தானம்.. ஜெய்பீம் பட சர்ச்சையால் இணையத்தில் கொந்தளித்த ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் திரைத்துறையினர், அரசியல் வட்டாரங்கள், மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது. முதலில் பாமகவினர் வன்னியர் ஜாதியை குறிப்பிடுவது போல் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. ...