கதை ரெடி பண்ணல வெயிட் பண்ணுங்க.. விக்ரமை அலைக்கழிக்கும் 2 இயக்குனர்கள்

நடிகர் விக்ரம் தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். பிதாமகன், ஐ போன்ற படங்களில் விக்ரமின் நடிப்பை நம் அனைவராலும் மறக்க முடியாது. தற்போது இவரது மகன் துருவ் விக்ரம் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஆதித்யா வர்மா மற்றும் மகான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தந்தை மகன் இருவரும் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான மகான் திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியான தும்பி துள்ளல் பாடல் இணையத்தில் சக்கை போடு போட்டது.

இந்த நிலையில் சீயான் 62 திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கிறார்.  விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இயக்குனர் பா ரஞ்சித் இன்னும் விக்ரமுக்கு கதை சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

பா ரஞ்சித் திரைக்கதையை இன்னும் தயார் செய்யவில்லை. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இருக்க வேண்டும் என விக்ரமிடம் கூறியுள்ளார். இதே சமயத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் விக்ரமிற்காக ஒருபுறம் காத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

ஆனால் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இப்படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட முடியாமல் தடைபட்டது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகியும் இப்படத்தினை பற்றிய எந்த ஒரு அப்டேட் வெளியாகவில்லை. இதனால் கௌதம் வாசுதேவ மேனனின் நம்பி இருப்பது தற்போது வேலைக்காகாது என கூறியுள்ளார்.

முதலில் விக்ரம் வைத்து படம் இயக்குவதற்கு பல இயக்குனர்களும் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சமீபகாலமாக விக்ரமிற்கு எந்த படமும் வெற்றி பெறாததால் இயக்குனர்கள் பெரிய அளவில் விக்ரமை கண்டுகொள்வதில்லை அதனால் விக்ரம் தனக்கு நெருக்கமான இயக்குனர்களுக்கு போன் செய்து தன்னை வைத்து படம் எடுக்கும்படி தொடர்ந்து கேட்டு வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.