கதைக்காக ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடித்த 5 நடிகைகள்.. அத்தோட பட வாய்ப்பை இழந்த அமலா பால்

சினிமாவில் கதைக்காக நடிகர் நடிகைகள் எடுக்கின்ற முயற்சிகளை பார்த்து வியந்து இருப்போம். நடிகர்கள் உடலை வருத்தி தேவையான நேரத்தில் உடலை ஏற்றியும் இறக்கியும் நடித்து இருப்பார்கள். அதேபோல சில நடிகைகளும் உடலை மெருகேற்றி திரையில் சிறப்பாக தெரியவேண்டும் என உழைப்பார்கள். கதைக்கு தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்கமால் செய்து நடிக்கும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படி படத்தின் கதைக்காக தன்னை அர்ப்பணித்து அரை நிர்**ணமாக நடிக்க சொன்னாலும் நடித்து காட்டி பெயர் வாங்கிய நடிகைகள் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

அமலா பால்: தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகையாக வலம் வர கூடியவர் தான் அமலா பால். மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஆடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்தார். படத்தின் போஸ்டர் வெளியாகும் போதே சர்சைக்கள் பல வர ஆரம்பித்தது. அந்த படத்தின் ஒரு காட்சியில் நிர்**ணமாக நடிக்க பணிக்கபட்ட அமலாபால் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல், நடித்து இருப்பார். அதன் பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், நான் அந்த காட்சி நடிக்கும் போது எனக்கு 40 கணவர் இருப்பது போல உணர்ந்தேன் என்று அமலாபால் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்தோட பட வாய்ப்பைகளையும் இழந்தார் அமலா பால்.

ராதிகா ஆப்தே: தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி மற்றும் வெற்றிச்செல்வன், தோனி போன்ற படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் எதுவாக இருந்தாலும், துணிந்து நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இவர் பல படங்களில் நிர்**ணமாகவும், அரை நிர்**ணமாக சில காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் பெயர் வாங்கியவர். பார்ச்சட் என்ற இந்தி படத்தில் பாலியல் தொழிலாளியாக வந்தார். கவர்ச்சியின் உச்சத்தில் அந்த படத்தில் நடித்து இருந்தார். இதற்கிடையில், ராதிகா ஆப்தேவின் நிர்**ண வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் எதற்கும் தயங்காமல் தொடர்ந்து முன்னறிச் சென்று கொண்டு இருக்கிறார் ராதிகா ஆப்தே.

வித்யா பாலன்: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் வித்யாபாலன். இவர் தமிழில் குரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, அவர் தமிழில் தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் வித்யாபாலன். கவர்ச்சியில் எப்போதும் தாராளம் காட்டும் இவர், தான் நடிக்கும் படங்களில் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியை அள்ளி கொடுக்க கூடியவர். பாலிவுட்டில் பெரும்பாலான நடிகைகள் உடம்பை பிட்டாக வைத்தால் தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்பதை மாற்றி திறமையும் உண்மையான அர்ப்பணிப்பும் இருந்தால் போதும் என நிரூபித்து கொண்டு இருப்பவர் வித்யா பாலன்.

ஆண்ட்ரியா: பின்னணி பாடகியாக தனது திரைப்பயணத்தை தொடங்கி, பிறகு சில படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிக்க தொடங்கிய காலத்திலேயே கிளாமர் பக்கம் அதிக ஆர்வம் காட்டுவார். அப்படி இருக்கையில் ஒரு முறை பொது நிகழ்வில் கூட தான் கதைக்காக நிர்**ணமாக நடிக்க தயார் என்று கூட கூறி இருக்கிறார். அதன் படி ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை போன்ற படங்களில் மேலாடை இல்லாமல் நடித்து இருப்பார். அதைபோல் மிஸ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் ஒரு 15 நிமிட நீள காட்சியில் ஆண்ட்ரியா நிர்**ணமாக நடித்து இருப்பதாக கூறி அதிர வைத்து இருக்கிறார்.

பூஜா காந்தி: கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. தற்போது கன்னடத்தில் பிரபல நடிகையாக உள்ளார். அதன் பின் அரசியலில் மிகப்பெரிய ஆர்வம் காட்டினார். அரசியலுக்கு வரும் முன்பு அவர் தண்டுபாளையா என்ற படத்தில் முக்கால் நிர்வாணமாக நடித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் முதுகுப் பகுதி உள்ளிட்ட பூஜா காந்தியின் பின்பகுதிகள் முழுவதும் அப்பட்டமாக தெரியும் வகையில் அவர் காட்டி இருப்பார், பின்பு இந்த படத்தில் முக்கால் நிர்**ணமாக நடித்துள்ளார் பூஜா காந்தி. இதுகுறித்து பூஜா காந்தி கூறும்போது, படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால், அவ்வாறு நடித்து உள்ளேன், . முன்புறம் சேலையால் மறைக்க முயற்சி செய்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மோகன்லாலின் மரைக்காயர் படத்தில் மேலாடை இன்றி ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். அவர் அந்த கதையில் அப்படி ஒரு காட்சி கதைக்காக தேவைப்பட்டது என்று அந்த காட்சியை ஒப்புக்கொண்டு அதில் நடித்து இருந்தார்.