கண்ணீருடன் காதலனை கரம்பிடித்த சர்கார் பட நடிகை.. வைரலாகும் வீடியோ பதிவு!

சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் தனது கலக்கல் நடிப்பால் நாயகியாக வலம் வந்தவர் பிரபல நடிகை வைஷாலி தனிகா. இவர் கால்பதித்த இடங்களிலெல்லாம் வெற்றி கொடி கட்டி பறந்தார். முதன்முதலில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

விஷாலின் கதகளி படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பால் பல படவாய்ப்புகளை பெற்று நடிப்பு திறனை வெளிக்காட்டினார். இவரின் மற்ற படங்கள் காதல் கசக்குதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ, போன்ற பல படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது மொத்த நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தினார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு சின்னத்திரையில் மாப்பிள்ளை, லக்ஷ்மி வந்தாச்சு, ராஜா ராணி என பல வெற்றித் தொடர்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது சன் தொலைக்காட்சியின் மகராசி மற்றும் ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை போன்ற நம்பர் ஒன் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் சத்யதேவ் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பல தடைகளைத் தாண்டி தற்போது தனது காதல் கணவரை கண்ணீர் மல்க கைப்பற்றியுள்ளார். கண்ணீருடன் கனவு நாயகனை கரம்பிடித்த நடிகை

திருமணத்தின்போது ஆனந்த கண்ணீருடன் தனது கனவு நனவானதை உணர்ச்சிபொங்க வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. தாலிகட்டும் அந்த ஒரு நிமிடம்

இனி திருமணத்திற்குப் பிறகு இவரின் திரைப்பயணம் தொடருமா அல்லது முடியுமா என ரசிகர்கள் ஆர்வத்துடனும், ஏக்கத்துடனும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சமந்தா விவாகரத்துக்கு காரணமே அந்த நடிகர்தான்.. வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சிய கங்கனா

இந்திய திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது நட்சத்திர ஜோடிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து தான். இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து ...