கண்ணிலேயே சினிமாவிற்குப் ஃபார்முலா சொன்ன பசுபதி.. குருநாதா இத்தனை நாள் எங்க போனீங்க!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பசுபதியை கண்டாலே பயந்து நடுங்காத ஆட்களே கிடையாது என்றுதான் கூறவேண்டும். அந்த அளவிற்கு பயங்கரமான வில்லத்தனத்தின் மூலம் பல படங்கள் நடித்து தனக்கென இடம் பிடித்தார்.

அதுவும் பசுபதி நடித்த பட்டாசு பாலு கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. தொடர்ந்து வில்லனாக பல படங்களில் நடித்து வந்த பசுபதி ஒரு கட்டத்திற்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். வெயில் படத்தில் கதாநாயகனாக நடித்த பசுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வாங்கி அதன் மூலம் கதாநாயகனாகவும் நிரூபித்தார்.

பின்பு பசுபதிக்கு தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தி தற்போதுவரை பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

அதுவும் இப்படத்தில் இவர் நடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்லாக வெளியாகி செம வைரலாகின. அதன் பிறகு ஆர்யா மற்றும் பசுபதி இருவரும் சைக்கிளில் சென்ற மீம்ஸ்தான் சமூக வலைத்தள பக்கத்தை ஆட்டிப் படைத்தது.

தற்போது பசுபதியிடம் உங்கள் நடிப்பின் ரகசியம் பற்றி கூறுங்கள் என சொல்லியதற்கு பசுபதி புருவத்தை உயர்த்தி கண்ணை விரித்துப் பார்த்தால் வில்லன், அதுவே கண்ணை சுருக்கி சாதாரண பார்த்தால் ஹீரோ இவ்வளவுதான் விஷயம் என கூறியுள்ளார். இந்த பார்முலாவை தான் சார்பட்டா பரம்பரை படத்தில் பயன்படுத்தியதாக  கூறியுள்ளார்.

விஜய் டிவி பிக்பாஸின் டிஆர்பி ரேட்டிங்கை பின்னுக்குத் தள்ளிய சன் டிவி.. தளபதினா சும்மாவா!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கக்கூடிய பிக் பாஸ் சீசன்5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி அன்று, இந்நிகழ்ச்சியின் முதல் எபிசோடை விஜய் டிவி ஒளிபரப்பு செய்தது. அதே சமயத்தில் சன் டிவியில் நடிகர் விஜய், ...