விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி எப்பொழுதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பெற்று வந்த சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. தற்பொழுது இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து டி ஆர் பி யில் முதலிடத்தில் இருந்து வந்த பாரதி கண்ணம்மாவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை தட்டி பறித்து சூப்பர் ஹிட் சீரியலாக வலம் வருகிறது பாக்கியலட்சுமி நெடுந்தொடர். தற்பொழுது விறுவிறுப்பான கதை களத்துடன் அருமையாக ஒளிபரப்பாகி மக்களின் கவனத்தை தன்பால் ஈர்த்து டிஆர்பி யில் முதலிடத்தை பெற்றுள்ளது.

மேலும் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ள மற்றொரு சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. ஒரு அழகிய கூட்டு குடும்ப கதையை மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் உடன் மகா சங்கத்தில் இணைந்து மேலும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள சீரியல் ‘பாரதிகண்ணம்மா’. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியன் விலகியது தான் இதற்கு காரணமோ என்று பலராலும் பேசப்படுகிறது.

அடுத்தபடியாக நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது ‘ராஜாராணி’ சீசன் 2. அதைத்தொடர்ந்து ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ள புதிய சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்’.ஒளிபரப்பாகி சில மாதங்களே ஆன நிலையில் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த சீரியல். இதனைத்தொடர்ந்து ஆறாம் இடத்தைப் பெற்றுள்ள சீரியல் ‘மௌனராகம்’ மற்றும் ஏழாம் இடத்தைப் பெற்றுள்ளது ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்’.

அடுத்தபடியாக எட்டாம் இடத்தை பிடித்துள்ள சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ள சீரியல் ‘தென்றல் வந்து என்னைத்தொடும்’. இந்த சீரியலும் ஒளிபரப்பான சில மாதங்களிலேயே மக்களின் மனதில் பெரிய இடத்தைப் பிடித்து அசத்தி வருகிறது. அதைப்போல் 10-ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறது ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல்.

இவற்றைத் தொடர்ந்து பதினோராம் இடத்தில் ‘நம்ம வீட்டுப் பொண்ணும்’, 12ஆம் இடத்தில் ‘தேன்மொழி பிஏ’ சீரியலும், 13ஆம் இடத்தில் ‘வேலைக்காரன்’ சீரியலும், 14ஆம் இடத்தில் ‘பாவம் கணேசன்’ சீரியலும் மற்றும் 15ஆம் இடத்தில் ‘ராஜபார்வை’ சீரியலும் இடம்பிடித்து உள்ளது.

இவ்வாறு இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அடுத்த வாரமும் இதே நிலை தொடருமா அல்லது ஒவ்வொரு சீரியலும் முதலிடத்திற்கு வர கடுமையாக உழைத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் போட்டிபோட்டு ஒளிபரப்பாகுமா என பொருத்திருந்து பார்க்கலாம்.