கணவரை தவறாக பேசிய நபர்.. கோபத்தில் கொந்தளித்து VJ அஞ்சனா வெளியிட்ட பதிவு

பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக் சேனலில் விஜேவாக பணியாற்றியவர் தான் அஞ்சனா. இவர் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மணிமேகலையின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தொகுப்பாளியாக வலம் வந்த அஞ்சனா கயல் படம் மூலம் பிரபலமான நடிகர் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

திருமணம், குழந்தை என சில காலம் மீடியாவில் இருந்து விலகி இருந்த அஞ்சனா சமீபகாலமாக பேட்டிகளில் பங்கேற்பது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார். இதுதவிர சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

இதன் காரணமாக இவருக்கென சோசியல் மீடியாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அஞ்சனாவும் அவ்வபோது தன்னுடைய ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் உரையாடி வருவார். இந்நிலையில் தான் முகம் தெரியாத இணையவாசி ஒருவர் அஞ்சனாவிடம், “நீங்கள் நடிகையாக வரலாமே, உங்கள் கணவர் தான் திரைத்துறையில் பீல்ட் அவுட்டாகி கிடக்குறாரே, நீங்க நடிகையானால் அவருக்கு உதவியாக இருக்கும்” என குறிப்பிட்டு, அஞ்சனாவின் கணவர் கயல் சந்திரனையும் டேக் செய்துள்ளார்.

இதை பார்த்து கடுப்பான சந்திரன் அந்த பதிவை ஸ்கீரின் ஷாட் எடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த நபர் சமூகவலைத்தளங்களில் பல பெயர்களை வைத்து, சில மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார். முகம் தெரியாத இடியட், உன்னை எச்சரிக்கிறேன்” என பதிவு செய்து சென்னை போலிஸ் சமூகவலைதள பக்கத்தை டேக் செய்துள்ளார்.

மேலும் அந்த நபரின் செயலால் கோபம் தலைக்கேறிய அஞ்சனா, “உனக்கெல்லாம் வேல வேட்டி இருக்குல மூடிக்கிட்டு வேலைய பாரு, துஷ்ப்பிரயோகம் செய்றது தான் உன் முழு நேர வேலையா? உன்னை பெத்ததுக்கு உங்க அம்மா ரெம்ப பெருமைபடுவாங்க” என குறிப்பிட்டுள்ளார்.

செலிபிரிட்டி என்பதற்காக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடவோ, அவர்கள் குறித்து கமெண்ட் செய்யவோ யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பதை அனைவரும் மனதில் வைத்து கொண்டாலே இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.