விஜய் டிவியின் சீரியல்களுக்கான ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது அந்த ப்ரோமோவ பார்க்கும் பொழுது இந்த வாரம் முழுவதும் கட்டிப்பிடி வாரம் போல் தெரிகிறது.

அதாவது என்னன்னா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களான பாரதிகண்ணம்மா, தென்றல் வந்து என்னை தொடும், பாவம் கணேசன், தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியல் தான் கட்டிப்பிடி வைத்தியம் நடக்குது.

காதலை சொன்ன சந்தோஷத்துல பாவம் கணேசன் மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வரும் ஹீரோவும், ஹீரோயினும் கட்டிப்பிடிப்பதை போலவும், தன்னோட இரண்டாவது குழந்தையை பார்த்த சந்தோஷத்தில் கண்ணம்மா தன் மகளை கட்டிப்புடிகிறாங்க அதுல ஒரு லாஜிக் இருக்கு.

இதுல சம்பந்தமே இல்லாம தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் மாமியாரும், மருமகளும் கட்டி பிடிக்கிறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு. சும்மாவே விஜய் டிவி சீரியல இஷ்டத்துக்கு கலாய்ப்பாங்க  இப்போ சொல்லவா வேணும்.

இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் சொல்லி வச்ச மாதிரி ஜோடி ஜோடியா கட்டிப் பிடிக்கிறீங்களான்னு வடிவேலு ஸ்டைலில் கலாய்க்கிறாங்க. இதுல பாக்கியலட்சுமி சீரியலின் கோபியும், ராதிகாவும் தான் மிஸ்ஸிங்.