கட்சிக் கொடியுடன் மக்கள் நாயகி VJ சித்ரா.. ரசிகர்கள் உருவாக்கிய வைரல் போஸ்டர்

விஜய் டிவியில் கூட்டு குடும்பத்தையும், சகோதர பாசத்தையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதிர்-முல்லை என்கிற ஜோடிகள் அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர். இதில் முல்லை கதாபாத்திரத்தில் முதலில் நடித்த நடிகை விஜே சித்ரா. ஜீ தமிழ் டிவியின் அஞ்சறைப்பெட்டி, ஸ்டார் விஜய் டிவியின் வசூல் வேட்டை போன்ற நிகழ்ச்சிகளிலும், அத்துடன் பல்வேறு சேனல்களில் பலவிதமான நிகழ்ச்சிகளிலும் விஜேவாக சித்ரா பணியாற்றியுள்ளார்.

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லையாக களம் இறங்கிய பிறகே, இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில், விஜே சித்ராவின் இயல்பான நடிப்பினால் ஏராளமான இளம் வயதினர் ரசிகர்களாகினர். எனவே ரசிகர்களால் உருவாக்கப்பட்ட சித்ராவின் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது

இவ்வாறு பிரபலமாகி வந்த விஜே சித்ரா, தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில நாட்களே ஆகிய நிலையில், உடம்பில் அங்கங்கே படுகாயத்துடன் தற்கொலை செய்துகொண்டார். இது தற்கொலை அல்ல, கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தர்ப்பங்களும், சாட்சியங்களும் விஜே சித்ராவை அவரது கணவரே கொலை செய்திருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

மேலும் விஜே சித்ரா கால்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு வேறு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதேசமயம் தனது திரையுலக பயணத்தில் நன்கு பிரபலம் அடைந்து வந்த விஜே சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது விஜே சித்ரா மறைந்து பத்து மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில், இவரது ரசிகர்கள் இன்றும் விஜே சித்ராவை அவ்வப்போது நினைவு கூர்ந்து வருகின்றனர். திரைப்படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகைகளுக்கு கூட இந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இயங்கியதில்லை.

தற்போது மக்களின் நாயகி என்ற தலைப்பில் விஜே சித்ராவை வைத்து ரசிகர்கள் இயக்கியுள்ள புதிய புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.