கடை விளம்பரத்தை மிஞ்சிய ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ‘தி லெஜன்ட்’ சரவணா ஸ்டோர் அண்ணாச்சி படுத்தும்பாடு

தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்காக சன் டிவியில் நேருக்கு நேர் பேட்டி கொடுத்திருந்தார். மேலும், விஜய் பத்து வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார் என்பதால் பல ரசிகர்கள் இதை பார்த்து கண்டுகளித்தனர். இது ஒரு பக்கம் இருக்க விஜய்க்கே டஃப் கொடுக்கும் வகையில் அடுத்த நாள் நம்ம அண்ணாச்சி ஒரு தரமான செய்கை செய்துள்ளார்.

மிகப்பிரபலமான கடையான சரவணா ஸ்டோர்ஸின் ஒரு கிளையான செல்வரத்தினம் கடையின் முதலாளி லெஜண்ட் சரவணன் அருண். ஆரம்பத்தில் தங்களது கடையை பிரபலமாக்க பல நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரம் செய்வார்கள். ஆனால் இவர் தனது கடையின் விளம்பரத்தில் தானே நடித்தார்.

மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, ஹன்சிகா ஆகியோர் உடன் அந்த விளம்பரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நடிப்பின் மீதுள்ள ஆசையால் தற்போது கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். இவர் தன்னுடைய சொந்த தயாரிப்பின் மூலம் தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக உலக அழகி ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் பேட்டிக்கு மறுநாள் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியானது. இதில் ரொம்ப கலர்ஃபுல்லாக குத்தாட்டம் போட்டுள்ளார் நம்ம அண்ணாச்சி.

இந்த பாடல்கள் எல்லாம் தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் செய்வதற்கு மணிரத்தினம், ராஜமவுலி போன்ற பிரம்மாண்ட இயக்குனர்கள் கலந்து கொண்டனர். விஜய் பேட்டியை யூட்யூபில் பார்த்த ரசிகர்களின் அளவிற்கு சரவணன் அண்ணாச்சி பர்ஸ்ட் சிங்கிள் பாட்டுகளை பார்த்து வருகின்றனர்.

அனேகமாக படம் ரிலீசாகி அஜித், விஜய், சூர்யா போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு அண்ணாச்சி டஃப் கொடுப்பார் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். மேலும் முதல் படத்திலேயே பாலிவுட் நடிகையுடன் நடிக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும், எல்லாம் நம்ம அண்ணாச்சி அதிஷ்டம் அப்படி எனவும் கூறி வருகிறார்கள்.