கடைசிவரை நான் தேவுடு காக்க வேண்டுமா.? ரசிகர்களுக்காக தவம் கிடக்கும் ரஜினி

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் சினிமாவில் இவ்வளவு பிரபலம் ஆவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக இருப்பது அவரின் மீது தீராத பற்றுக் கொண்ட அவரது ரசிகர்கள் மட்டுமே.

அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை அவருடைய ரசிகர்கள் ரஜினிகாந்தை தங்களின் தலைவராக நினைத்து கொண்டாடி வருகின்றனர். இதனால் தான் சூப்பர் ஸ்டார் வருடத்துக்கு ஒருமுறை தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அவருக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருக்கிறது. அது என்னவென்றால் தன்னை இந்த அளவுக்கு புகழின் வெளிச்சத்தில் வைத்திருக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு வேளையாவது சாப்பாடு போட வேண்டும் என்ற ஆசை தான் அது.

இந்த ஆசையை செயல்படுத்துவதற்கு ரஜினிகாந்த் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவர் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது. அவரின் இந்த முயற்சிக்கு முறையான அனுமதி கிடைக்காதது தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

ரஜினி இவ்வாறு ஒரு விழாவை ஏற்பாடு செய்தால் அதில் மொத்த ரஜினி ரசிகர்களும் வரவேண்டியிருக்கும். அப்படி அவர்கள் அனைவரும் வரும் பட்சத்தில் அது சாதாரண ஒரு விழாவாக இல்லாமல் பெரிய மாநாடாக மாறிவிடும். அதனால்தான் அரசாங்கம் இதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது.

இதே போன்று தெலுங்கு சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி தன்னுடைய மகன் ராம்சரண் திருமணத்தின்போது ரசிகர்களுக்காக தனியே ஒரு பிரம்மாண்ட வரவேற்பை நடத்தி அவர்களுக்கு சாப்பாடு போட்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.