கடைசியா பாரதி கண்ணம்மாவுக்கு ஒரு எண்டு கார்டு வந்துடுச்சு.. என்ன ஒரு ட்விஸ்ட்!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் கணவன்-மனைவியாக வாழ்ந்து கொண்டிருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்பது வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள் இருவரும் எப்போது சேர்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதற்கான சாத்தியக் கூறு தற்போது நிகழ்ந்துள்ளது.

ஏனென்றால் கண்ணம்மாவிடம் வளரும் பாரதியின் குழந்தை லஷ்மி தன்னுடைய அப்பாவை தேடும் நிகழ்ச்சியில் தீவிரம் காட்டி கொண்டு இருக்கிறாள். இதற்கு தடையாக நின்ற தன்னுடைய அம்மாவையும் தற்போது எதிர்க்கத் துணிந்து விட்டாள்.

ஆகையால் கண்ணம்மாவும் பாரதிதான் லஷ்மியின் அப்பா என்ற உண்மையை சொல்லி விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாள். இதுகுறித்து சௌந்தர்யா மற்றும் பாரதி உள்ளிட்டோர் இருந்தபோது கண்ணம்மா எடுத்த இந்த முடிவை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.

அந்த சமயம் அப்பாவின் விலாசத்தை கண்டுபிடித்து சௌந்தர்யாவின் வீட்டிற்கு வந்த லஷ்மி, கண்ணம்மா பேசுவதை கேட்டுவிட்டாள். இதன் பிறகு பாரதி தான் தன்னுடைய அப்பா என்பதை தெரிந்துகொண்ட லஷ்மி ஆனந்தத்தில் பூரிப்படைகிறாள்.

இதன்பிறகு லஷ்மி இதைப் பற்றி தெரிந்து கொண்டதை கண்ணம்மா உள்ளிட்டோரிடம் வெளிப்படையாக காட்டுவாரா அல்லது மனதிற்குள்ளே மறைத்துக்கொண்டு அப்பாவை தூரத்திலிருந்து ரசிப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

இருப்பினும் பாரதிகண்ணம்மா சீரியலில் இவ்வளவு நாள் லஷ்மிக்கு யார் அப்பா என்பதை காட்டாமல் சஸ்பென்ஸ் வைத்திருந்த நிலையில் திடீரென்று அந்த சஸ்பென்ஸை உடைத்து சீரியலில் அதிரடி ட்விஸ்ட் அரங்கேறியிருக்கிறது.