ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடகைகளில் மிகவும் முக்கியமான நடிகை தான் பானுப்பிரியா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பானுப்பிரியா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தமிழில் 40க்கு மேற்பட்ட படங்களிலும், தெலுங்கில் 55 படங்களிலும், ஹிந்தியில் 14 படங்களிலும் கன்னடம் மலையாளம் என ஒட்டு மொத்தமாக சுமார் 111க்கும் மேற்பட்ட படங்களில் நடிகை பானுப்பிரியா நடித்துள்ளார். தனது 17 வயது திரையுலகில் அறிமுகமான பானுப்பிரியா தமிழ் சினிமாவில் மெல்ல பேசுங்கள் என்ற படம் மூலம் அறிமுகமானார்.

அடிப்படையில் பானுப்பிரியா ஒரு பரதநாட்டிய டான்சர் என்பதால் பெரும்பாலான படங்களில் டான்சராகவே நடித்திருப்பார். இவரது நடனம் மட்டுமல்லாமல் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. பானுப்பிரியா கண்கள் மூலம் நடிப்பை வெளிப்படுத்துவதில் கைதேர்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் நடிப்பில் உச்சத்தில் இருந்த பானுப்பிரியா திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

அமரிக்காவைச் சேர்ந்த விருது பெற்ற பிரபல புகைப்படக்கலைஞர் ஆதர்ஷ் கவுசல், என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பானுப்பிரியா திருமணத்திற்கு பிறகும் படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இறுதியாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் பானுப்பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பானுப்பிரியா, “கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பிற்காக தென்காசியில் இருந்த போது எனக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் அமெரிக்காவில் உள்ள உங்கள் கணவர் திடீரென ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் என கூறினார்கள். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத சோகம். இன்றுவரை அதில் இருந்து நான் மீளவில்லை” என கூறிய பானுப்பிரியா தற்போது அவர் மகளுடன் வசித்து வருகிறார்.