விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் முதல் பாகம் நிறைவடைந்து, தற்போது இரண்டாவது பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகத்தில் கதாநாயகன் மாயனுக்கு தங்கையாக ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வனிதா இந்த சீரியலின் மூலம் பிரபலமானவர். ஏனென்றால் இவர்தான் இந்த சீரியலின் திருப்புமுனையாக அமைந்து, கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் முக்கிய கதாபாத்திரமாக இருந்தார்.

அத்துடன் வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியிலும் தனது கணவரோடு கலந்து கொண்டு கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வனிதா ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள், ரோஜா மற்றும் விஜய் டிவியின் பகல் நிலவு போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

ஆனால் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு பிறகு அவர் எந்த சீரியலிலும் தொடர்ந்து நடிக்க வில்லை. அதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. ஏனென்றால் வனிதா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

தன்னுடைய குழந்தையை எதிர்நோக்கி காத்திருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த சீரியல் ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

அத்துடன் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சசிந்தருக்கும் அண்மையில் தான் ஆண் குழந்தை பிறந்ததால், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் குடும்பத்தினர் ரெட்டிப்பு சந்தோசத்தில் கொண்டாடுகின்றனர்.