கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிந்து மாதவி.. அம்மணிக்குள்ள இவ்வளவு திறமையா!

தமிழ் சினிமாவில் பொக்கிஷம் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிந்து மாதவி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

பிந்து மாதவி நடிப்பில் வெளியான கழுகு திரைப்படம் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இப்படத்தில் இவர் மலைவாசி பெண்ணாக நடித்து இருந்தது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இவருக்கு ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பின்பு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா எனும் படத்தில் விமலுக்கு ஜோடியாக இவர் நடித்த காட்சிகள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன அதிலும் கண்ணை உருட்டி உருட்டி நடித்த காட்சிகள் கராத்தா வித்தைகள் என படத்திற்கு பக்கபலமாக அமைந்தன.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்தாலும் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு வரவில்லை அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு அதிகம் என எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே வந்து செல்கின்றன.

பிந்து மாதவி சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் நீச்சலில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்பவே படத்தை பார்த்த ரசிகர்கள் பிந்து மாதவிக்கு இவ்வளவு திறமைகளை எனக் கூறி வருகின்றனர் மேலும் ஒரு சில ரசிகர்கள் பிந்து மாதவியின் திறமையைப் பார்த்த விழுந்ததாகவும் தெரிவித்துவருகின்றனர் தற்போதைய இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.