கடனால் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. நண்பனுக்கு உதவி செய்ததால் வந்த பெரும் சோதனை

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட்டும் உயர்ந்தது. அதனால் தற்போது நடிக்கும் படங்களுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய நண்பர் ஆர் டி ராஜா. இவர்கள் இருவரும் சினிமாவின் ஆரம்பத்திலிருந்து நண்பர்களாக இருந்துள்ளனர். ஆர் டி ராஜா சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தை தயாரித்துள்ளார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவிற்கு வசூலை பெற்றது.

அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தை அவரது நண்பர் ஆர் டி ராஜா தயாரித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இதனால் ஆர்டி ராஜாவிற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. பின்பு சிவகார்த்திகேயன் இதனை வெளியில் சொல்லாமல் தனது நண்பனுக்காக மறைமுகமாக பல உதவிகள் செய்துள்ளார்.

அதாவது ஆர்டி ராஜாவிற்கு சிவகார்த்திகேயனால் தான் பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதனால் சிவகார்த்திகேயன் அந்த கடனை மறைமுகமாக சமாளித்து வருகிறார். தற்போது வரை சிவகார்த்தியன் அதற்கான கடனை பல படங்களில் நடித்து அதில் வரும் சம்பளத்தில் ஒரு பகுதியை கடனுக்கு கொடுத்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளதால் கூடிய விரைவில் அனைத்து கடன்களையும் அடைத்து விடுவார் என அவரது நெருங்கிய நண்பர்கள் கூறி வருகின்றனர். மேலும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் உடன் பல படங்களில் நடித்து வருவதால் அதற்காக மொத்த தொகையையும் வாங்கி உள்ளதாகவும் அதனால் விரைவில் முழு கடனையும் அடைத்து விடுவார் எனவும் கூறி வருகின்றனர்.

அந்த கேரக்டர் நான் தான் நடிப்பேன் என அடம் பிடித்த தளபதி.. ரகசியத்தை உடைத்த KS ரவிக்குமார்

தற்போது தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலில் வேட்டையாடி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிறது. விஜய் தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தனது ...