கஜானாவை நிரப்ப காத்திருக்கும் கலாநிதிமாறன்.. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து வந்த இரட்டிப்பு மகிழ்ச்சி

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 14 அன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் அரபிக் குத்து என்ற பாடல் வரும் பிப்ரவரி 14 அன்று வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்த பாடலை வித்தியாசமான முயற்சியில் நெல்சன் உருவாக்கியிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.

இதனால் அந்தப் பாடலை காண விஜய்யின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் குறித்த சின்ன சின்ன வீடியோ காட்சிகளை சன் பிக்சர்ஸ் நிர்வாகம் பார்த்துள்ளது. அந்த காட்சிகளை பார்த்த அனைவரும் தற்போது அதிக மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

ஏனென்றால் சமீபகாலமாக விஜய் நடிப்பில் வெளியான படங்களை காட்டிலும் இந்த படம் வேற லெவலில் இருக்கிறதாம். அதனால் திரைப்படம் வெளியாகும்போது வேறு எந்த பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானாலும் ஒரு பிரச்சினையும் இருக்காது என்று தயாரிப்பு குழு நிம்மதியாக இருக்கிறது.

ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகும்போது மற்றொரு மெகா பட்ஜெட் திரைப்படம் வெளியானால் இரண்டு படங்களுக்கும் வசூலில் பாதிப்பு ஏற்படும். ஆனால் பீஸ்ட் படத்தை பொறுத்தவரை படம் அபாரமாக இருப்பதால் நிச்சயம் அது ரசிகர்களை கவரும் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படம் குறித்து வெளியாகும் அப்டேட்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதை வைத்து பார்க்கும்போது பீஸ்ட் திரைப்படம் வசூலில் ஒரு சாதனையை ஏற்படுத்தும் என்பதால் படத்தின் தயாரிப்பாளர் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

இதனால்தான் சன் பிக்சர்ஸ் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்கும் படத்திற்கு மீண்டும் நெல்சனை இயக்குனர் ஆக்கியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுத இருக்கிறார். அதனால் இந்த கூட்டணியும் நிச்சயம் வெற்றி பெறும்.