ஓவர் பந்தா காட்டும் பிக்பாஸ் நடிகை.. சீன் போடலாம் ஆனா ஏக்கர் கணக்குல கூடாது!

தமிழ் சினிமாவில் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லாஸ்லியா. இப்படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்களிடம் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய குறும்படமும் வெளியாகி ரசிகர்களிடம் இவர்களது காதல் உண்மைதான் என்பதை பிக்பாஸ் உறுதி செய்தார். அதுமட்டுமில்லாமல் நாசுக்காக ஒருசில பேட்டிகளிலும் தங்களது காதலை வெளிப்படையாக தெரிவித்து இருப்பார்கள்.

ஒரு கட்டத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலிக்கவில்லை என வெளிப்படையாகக் கூறி அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால் இன்றும் அந்த சர்ச்சை சமூகவலைதளத்தில் சுற்றிக் கொண்டுதான் வருகிறது. கதாநாயகியாக தனது பயணத்தை தொடர்ந்துள்ள லாஸ்லியா தற்போது பல விதமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

ஒரு பக்கம் கவின் காதல் மற்றொரு பக்கம் தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் படத்தில் நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார். இதனால் தற்போது லாஸ்லியாவை சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தற்போது பத்திரிகையாளர் ஒருவர் லாஸ்லியா ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் நடிக்கும் போது தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட தொல்லைகள் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு காலதாமதமாக வருவதாகவும் இதனை தயாரிப்பாளர் கேட்டதற்கு நான் இருக்கும் இடத்திலிருந்து வருவதற்கு காலதாமதமாகும் அதனைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் எனவும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் என்ன பண்ணுவேன் போக்குவரத்து நெரிசல் காரணமாக என்னால் வர முடியவில்லை எனவும் காரசாரமாக கூறியதாகவும் கூறியுள்ளார். இதனால் தற்போது ரசிகர்கள் கொடுத்த பில்டப்பிற்கு ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் ஒன்றும் பெரிதாக இல்லை ஓரமா போ எனக் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

வித்தியாசமான படத்தை கையிலெடுத்த பாலா.. முதல்முறையாக அதர்வாவுக்கு ஜோடியாகும் நடிகை

சினிமா திரையில் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு தனித்துவமான கதைக்களத்தை கொண்டிருக்கும். ஒவ்வொரு படங்கள் இயக்குனர்களின் சாயலும் இருக்கும். ஒரு திரைப்படத்தின் கதை அல்லது எடுக்கப்பட்டிருக்கும் விதத்தை வைத்தே இயக்குனர்களை நம்மால் கணிக்க முடியும். அந்த ...