ஓல்ட் இஸ் கோல்டுன்னு சும்மாவா சொன்னாங்க.. இவங்க எல்லாம் அந்த காலத்திலே வேற லெவல்!

பொதுவாக சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். ஒரு சிலர் நடிப்பை தாண்டி மற்றும் பல கலைகளை கற்று வைத்திருப்பர். இன்றைய கால நடிகர்கள் சினிமாவில் நீண்டகாலம் தாக்கு பிடிக்கவேண்டும் என்பதற்காக சினிமாவில் நுழையும் போதே பல்வேறு கலைகளை கற்றுக்கொண்டே அறிமுகமாகின்றனர்.

ஒரு சிலர் தங்கள் சோம்பேறித்தனத்தால் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராமல், தங்களுக்காக மற்ற அனைவரையும் காக்க வைப்பார்கள். பொதுவாக நடிகர் சிம்பு மீது இந்த குற்றச்சாட்டு உண்டு. இப்படி காலதாமதம் செய்வதால் , மற்றவர்களின் நேரமும் வீணாகும்.

இன்னும் ஒரு சில நடிகர்களோ, மிக எளிதான காட்சியில் நடிப்பதற்கு கூட பல டேக்குகள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால்,சில ஜாம்பவான்கள் எவ்வளவு பெரிய கஷ்டமான சீனாக இருந்தாலும் ஒரே டேக்கில் முடித்துவிடுவார்கள்.

சமீபத்தில்கூட இயக்குனர் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உபென்னா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர். இப்படத்தின் மூலம் இவருக்கு தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் லிங்குசாமியின் படத்தில் ஒரு உணர்வுப்பூர்வமான காட்சியில் நடிப்பதற்காக பல டேக்குகள் எடுத்துக்கொண்டாராம். இதற்காக அனைவர் முன்னிலையிலும் லிங்குசாமி அவரை கண்டமேனிக்கு திட்டிவிட்டாராம். இதில் மனமுடைந்த கீர்த்தி ஷெட்டி அழுதுகொண்டே கேரவனுக்குள் சென்றாராம்.

இந்த டிஜிட்டல் உலகத்திலே இப்படி இருக்கும் போது, எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்து நடிகர்களான எம்ஆர் ராதா, பாலையா, வி கே ராமசாமி, நாகேஷ் ஆகியோர் ஒரே டேக்கில் நீண்ட வசனம் பேசி இயக்குனர்களை ஆச்சரியப்படுத்துவார்களாம்.