தமிழ் சினிமாவில் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தை பொங்கல் தினத்தன்று வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு பிறகு வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

ஆனால் சூர்யா முதலில் தியேட்டரை நம்பி தான் படங்களில் நடித்து வந்தார். தற்போது OTT தளங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருப்பதால் இனி நமக்கு கவலையில்லை படத்தை தியேட்டரில் வெளியிடுவதை விட OTT தளத்தில் வெளியிடுவதற்கு ஈஸியாக இருக்கிறது என முடிவு செய்து தற்போது தயாரிக்கும் படங்கள், நடிக்கும் படங்கள் உட்பட அனைத்து படங்களையும் OTT தளத்திற்கு கொடுத்து வருகிறார்.

சூர்யா நடிப்பில் ஜெய் பீம் படம் உருவாகி உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க பழங்குடியினர் காட்டுவாசி  மக்களின் வாழ்க்கை தரத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார், படப்பிடிப்பின் போதே படத்தை OTT தளத்திற்கு கொடுப்பதாக சூர்யா தெரிவித்திருந்தார். பலரும் தியேட்டர் திறந்த பிறகு எதற்கு OTT தளத்தில் கொடுக்க வேண்டும் எனக் கூறி வந்தனர்.

ஆனால் சூர்யா விவரமாக தான் படத்தை OTT தளத்திற்கு கொடுக்க முன்வந்துள்ளார். அதற்கு காரணம் படத்தில் இருக்கும் வசனங்கள் அரசாங்கத்தை நேரடியாக கேள்வி கேட்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் வெளியிட்டால் கண்டிப்பாகத் பெரிய அளவில் சூர்யாவிற்கு குடைச்சல் கொடுப்பார்கள் என்பதால் படத்தை OTT தளத்திற்கு கொடுத்துவிடலாம் என முடிவு செய்துள்ளார்.

இதை தவிர சென்சார்போர்டு கதை அம்சத்திற்கு தேவையான காட்சிகளை கட் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாம். முக்கியமான வசனங்களை தூக்கி விடுவார்களாம், அந்த வசனங்கள் தூக்கிவிட்டாள் படம் பார்க்கவே சுவாரசியம் இருக்காது என்பதால் சூர்யா OTT  தளத்திற்கு கொடுக்க முன்வந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.